மே 3 நடப்பு நிகழ்வுகள்

0

மே 3 நடப்பு நிகழ்வுகள்

மே 3 – உலக பத்திரிகை சுதந்திர தினம்

2018 தீம் – “Keeping Power in Check: Media, justice and the Rule of Law”

  • உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

மாநிலம்

தமிழகம்:

நீட்ஸ்திட்டம்

  • படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம்’ (NEEDS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

தேசியசெய்திகள்

டெல்லியின் இத்தாலி தூதரகத்தில் ஓவியக் கண்காட்சி:

  • இத்தாலியுடன் இந்தியாவிற்கு கலாச்சாரத் தொடர்பு உருவாகி 70 வருடங்கள் முடிந்துள்ளன.
  • இதை நினைவுகூரும் வகையில் டெல்லியின் இத்தாலி தூதரகத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த ஓவிய கண்காட்சியை மத்திய அரசின் இந்திய கலாச்சாரத் தொடர்பு கவுன்சில் (ஐசிசிஆர்) மற்றும் இத்தாலி தூதரகத்தின் கலாச்சார மையம் ஆகியவை இணைந்து நடத்தின.

நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனை:

  • பிரதமரின் மருத்துவப் பாதுகாப்பு திட்டம் 2020 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதில் 6 மருத்துவமனைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு விட்டன. இதுதவிர 73 மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

உமாங் செயலி மூலம் ஓய்வூதிய கணக்கு புத்தகத்தை பார்க்கும் சேவை:-

  • ஓய்வூதியதாரர்கள் உமாங் செயலி மூலம் “ஓய்வூதிய கணக்கு புத்தகத்தைக் காட்டுக” எனும் சேவையை ஈ.பி.எஃப்.ஓ. அறிமுகம் செய்துள்ளது.

பெண் குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்” திட்டம்: தேசிய கருத்தரங்கு

  • “பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 244 மாவட்டங்களில் செயல்படுத்துவது தொடர்பாக தேசிய மாநாட்டை மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் நாளை (2018, மே 4) நடத்துகிறது.

பிரதமர் மோடி அடுத்த வாரம் நேபாளம் நாட்டுக்கு பயணம்

  • நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ளது தும்லிங்டார் பகுதி. இங்குள்ள காண்ட்பரி 9 என்ற இடத்தில் இந்திய அரசின் உதவியுடன் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்மின் திட்டம் செயல்பட உள்ளது.
  • நேபாள பிரதமர் – சர்மா ஒலி

பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டம்

  • பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பொறுப்பு தி டால்மியா பாரத் குரூப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
  • மேலும் சில நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு.

சர்வதேச செய்திகள்

இந்திய, சீன ராணுவங்கள் இடையே நேரடி தொலைபேசி சேவை

  • மோடி, ஜின்பிங் பேச்சைத் தொடர்ந்து இந்திய சீன ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றத்துக்காக நேரடி தொலைபேசி (ஹாட்லைன்) சேவை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரவீந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாள்

  • புகழ்பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு எகிப்து தலைநகரான கெய்ரோவில் 5 நாள் கலாச்சார திருவிழா நடைபெற உள்ளது.
  • இவர் 1913ஆம் ஆண்டு மிக உயர்ந்த விருதான நோபல் பரிசை பெற்றவர்.

வணிகசெய்திகள்

ஐஆர்டிஏஐ புதிய தலைவர்

  • இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) தலைவராக சுபாஷ் சந்திர குந்த்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
  • எல்ஐசி தலைவர் – வி.கே.சர்மா
  • நியு இந்தியா அஸ்யூரன்ஸ் தலைவர் – ஜி.ஸ்ரீனிவாசன்

தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு திட்டம் 2018

  • 2022-ம் ஆண்டுக்குள் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான 5ஜி பிராட்பேண்ட் சேவை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இந்த வரைவின் நோக்கமாக உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிகர லாபம் 35% உயர்வு

  • மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப்பின் மார்ச் காலாண்டு நிகர லாபம்78% உயர்ந்து ரூ.967.40 கோடியாக உயர்ந்திருக்கிறது.
  • ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம்4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

விளையாட்டுசெய்திகள்

பேட்மிண்டன்

  • இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான பிரனோய் முதன்முறையாக உலகத் தரவரிசையில் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • மற்றொரு முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கிரிக்கெட்

  • ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலிடத்தை இழந்தது இந்திய அணி

  • 5 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
  • முதலிடத்தில் இருந்த இந்திய அணி 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!