நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 7,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 7,2018

 2017 ஆம் ஆண்டில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து அதிக அளவு கடனுதவி பெற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.
 உலக பொருளாதார மன்றம் “(World Economic Forum) வெளியிட்டுள்ள “உலக உற்பத்தியாளர் பட்டியலில் “(Global Manufucturing Index) இந்தியா 30 வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பட்டியல் முதல் மூன்று இடங்களை முறையே ஜப்பான், தென் கொரியா மற்றும் ஜெர்மனிநாடுகள் பெற்றுள்ளன.
 பாடகர் SPB க்கு எல்.வைத்தியநாதன் விருது 2018 வழங்கப்பட்டுள்ளது. பிரபல வயலின் இசைக் கலைஞரும் இசையமைப்பாளருமான ட. வைத்தியநாதன் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
 2016 – 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக அளவில் வெளிநாட்டு முதலீடு செய்த நாடுகளில் மௌரீசியஸ் நாடு முதலிடத்திலுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களைவயில் 2.1.2018 அன்று நிறைவேற்றப்பட்டது. பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து திவாலாகும் போது அதன் முதலிட்டாளர்கள் பங்கு தாரர்கள் கடன் கொடுத்தவர்கள் ஆகியோரும் பெரும் இழப்பை சமாளிக்க இச்சட்டம் உதவும்.
 ஐ.நா.வின் புதிய நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக ஈகுவடோரியல் ஹெய்னா இவரி கோஸ்ட; குவைத் பெரு போலாந்து மற்றும் நெதர்லாந்துஆறு நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
 “ஹார்பா (Harba) என்ற பெயரில் ஏவுகணையை பாகிஸ்தானின் கடற்படை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
 ஆண் – பெண் பணியாளர்களுக்கான சம ஊதியத்தை சட்டப் பூர்வமாக்கியுள்ள உலகின் முதல் நாடு எனும் பெருமையை ஐஸ்லாந்து நாடு பெற்றுள்ளது.
 உலகின் மிகப் பெரிய காற்று சுத்திகரிப்பு ஆலை சீனாவின் ஷாங்சி நகரில் அமைக்கப்பட்டு;ள்ளது. “ஷியான் ஸ்மோக் டவர்” (Xian Smog tower) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காற்று சுத்திகரிப்பு ஆலை 100அ உயரமுடையது.
 10 வது உலகவு உணவு மற்றும் விவசாய் கூடுகை 2018 (Global Forum for  Food & Agriculture) ஜனவரி 18 முதல் 20 வரையில் ஜெர்மனியில் பெர்லினில் நடைபெற உள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!