நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 5,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 5,2018

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் இரு சக்கரம் வாங்க மானிய விலையில் 50மூ வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
 2016 – 2017 ம் கல்வியாண்டில் தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் படங்கள் கொண்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் இராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரு சட்ட பேரவைத் தொகுதிக்கும் நடக்கவுள்ள தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.
 நாட்டை பாதுகாக்கும் பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படையினரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் கீதம் ஒன்றை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங 20.01.2018 அன்று வெளியிட்டார்.
 மத்திய தேர்தல் கமிஷனர்கள் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஆகிய மூவரும் நிர்வாக அடிப்படையில் ஒரே நிலையில் உள்ளனர்.
 திரிபுரா வில் பிப்ரவரி 28லும்ää மேகாலயாää நாகாலாந்து ஆகிய சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 யில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 அக்னி 5 ஏவுகணை : அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக் கூடிய அக்னி – 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 5000km தூரம் வரை இலக்குகளை தாக்கி அழிக்கும்.
 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடிக்கு பரிசாக இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட கடல் நீரை சுத்திகரிக்கும் வாகனத்தை (ஜீப்) அளித்துள்ளார்.
 “ஹஜ்” மானியம் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 ஆபரேஷன் சைரஸ் இந்தியா முழுவதும் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோரப் பாதுகாப்பு குழுவால் நடத்தப்பட்டது.
 இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுகோய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பயணம் செய்தார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!