நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 14,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 14,2018

 மத்திய நன்னீர் வளர்ப்பு மையத்தின் தலைமையம் புவனேஷ்வரில் உள்ளது. இது நன்னீர் மீன் வளர்ப்புக்கான ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும்.
 பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கீர் நகரில் சர்வதேச தர்ம தம்ம மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தொடங்கி வைத்தார்.
 இந்திய தேசிய கொடுக்கல்கள் நிறுவனத்தின் (NPCI) புதிய மேலாண்மை இயக்குநராக திலீப் அஸ்பே நியமிக்கப்பட்டுள்ளார்.
 இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக (ISRO) K. சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்ராக்கெட் மென்”என அழைக்கப்படுகிறார்.
 பஞ்சாப் மாநில அரசு அண்மையில் இருக்கும் அனைத்து 45 அரசு இரத்த வங்கிகளிலும் e- Rakkosh வலைதளத்தை தொடங்கியுள்ளது.
 பஞ்சாப் தேசிய வங்கி பட்டியல் வகுப்பைச் சேர்ந்தரின் குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு தேசிய பட்டியல் வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (National Schedulded Castes Finance And Development Corporation)இணைத்துள்ளது.
 2018 சர்வதேச கொல்கத்தா ஓப்பன் இன்விடேஷன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை ஆதித்யா மேத்தா வென்றுள்ளார்.
 பெண்குழந்தைகளுக்கு கல்வி மீதான மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் (ABE) துணைக் குழுவானது நாடு முழுவதும் முதுகலை இலவச கட்டாய கல்வியை பெண்களுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது. இதன் தலைவர் கதியம் ஸ்ரீஹரி ஆவார்.
 ரயில்வே அமைச்சகம் அண்மையில் சரக்கு மேலாளர்களுக்கு என சிறந்த செயல்முறைக்கு உதவக்கூடிய ஒருமுதன்மையான டிஜிட்டல் முன் முயற்சியாக (Smart Freight Optimization and Real Time information (SFOORTI) செயலியை அறிமுகம் செய்துள்ளது.
 வர்த்தக ஒத்துழைப்புக்காக இந்தியாவின் குஜராத் தொழில் மற்றும் வர்த்தக சங்கம் GCCI தென்கொரியா நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!