ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 19 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 19 2018

 தமிழகத்தின் கோட்டாää தோட்டா மொழிகள் உள்பட 42 இந்திய மொழிகள் அழிவின் விளிம்பிள் உள்ளதாக “UNESCO” ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை இயக்குனரகம் கண்கெடுப்பின்படி 22 பட்டியலிடப்பட்ட மொழிகளும் (ஐஊ 8வது அட்டவணை) 100 பட்டியலிடப்படாத மொழிகளும் உள்ளன.
மாநிலம் – அழியும் தருவாயில் உள்ள மொழிகள்
தமிழ்நாடு – தோடா, கோட்டா
மணிப்பூர் – அய்மோல் (Aimol),ஆகா (Aka)
அந்தமாண்  நிக்கோபர் – ஜாத்வா (jathva) கோம்பன் (somben) சென்டிலிசி (sentilise)
கர்நாடகா – குரபா (kurafa) கோரகா (koraka)

 அடல் புஜல் யோஜனா : அரசு லட்சிய நீர் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்குகிறது. நிலத்தடி நீர் குறைவதால் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மத்திய அரசு லட்சிய நீர் பாசன பாதுகாப்பு திட்டமான (Ambitiacs Water Conservation Scheme) அடல் புஜல் யோஜனாவை உருவாக்கியுள்ளது.

 புதுபிக்கதக்க எரிசக்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரத்து 798 mw மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 500mw பிறமாநிலங்களுக்கு வழங்கும் அளவிற்கு உள்ளது.

 உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடு 2018 புது டில்லியில் நடைபெற்றது. இதன் கருப்பொருள் : ஒரு நெகிழ்திறன் கிரகத்திற்கான கூட்டமைப்பு ஆகும்.

 ONGC ஆசியாவில் பெரிய அளவிலான CO2 உட்செலுத்துதல் தொழில் நுட்பத்தை குஜரத்தில் உள்ள காந்தர் எண்ணெய் வயலில் அறிமுகப்படுத்த உள்ளது.

 குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் தரியே கோலாக்னா தங்கம் வென்றார்.

 குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அல்பைன் பனிச்சறுக்கில் ஆடவருக்கான சூப்பர் ஜி (Super G) பிரிவில் ஆஸ்திரியாவின் மத்தியாஸ் மேயர் தங்கம் வென்றார்.

 குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அல்பைன் மகளிருக்கான சலோம் பிரிவில் சுவீடன் வீராங்கனை பிரிடா ஹன்ஸ் டாட்டெர் தங்கம் வென்றார்.

குஜராத்தைச் சேர்ந்த 1500 உடற்பயிற்சி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிகப் பெரிய பயிற்சி திட்டம் (Train the Trainers) கோபிசந்த் அவர்களால் தொடங்கப்பட்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!