நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 11 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 11 2018

 கேரளாவின் புதிய நீதியரசாக நீதிபதி அண்டனி டொமினிக் (Antony Dominic)பதவியேற்றுக் கொண்டார். கேரளா கவர்னர் பி. சதாசிவம் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 முதலாவது கேலோ இந்தியா ஸ்கூல் விளையாட்டு போட்டிகள் தில்லியில நடைபெற்றது. இதில 38 தங்கம் மற்றும் 26 வெள்ளியுடன் 108 பதக்கங்களுடன் ஹரியானா முதலிடத்திலும் 111 பதக்கங்களில் மகாராஷ்டிரா 2 வது இடத்திலும் உள்ளது.

 ஒட்டுமொத்த சுகாதாரப்பட்டியலில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில கேரளா முதலிடம் பிடித்துள்ளது. நிதி அயோக் வெளியிட்டுள்ள சுகாதார ஆய்வறிக்கையின் படி கேரளா முதலிடத்திலும், பஞ்சாப் தமிழ்நாடு மற்றும் குஜராத் அடுத்தடுத்த இடத்திலும்; உள்ளது. இதனை “ஆரோக்கியமான மாநிலங்கள் முற்போக்கு இந்தியா” அறிக்கையின்படி ஆகும்.

 2 வது அக்பர் கேக்கட்டில் விருது 2018 “Akbar Kakkatti Award 2018” T.D ராமகிருஷ்ணனின் “சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி” எனும் நாவலுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது கோழிக்கூடுவில் நடைபெறும் விழாவில் அக்பர் கக்கட்டில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும்.

 6 வது Intellectual Property – Index (IPI – 2018) அறிவார்ந்த சொத்து குறியீட்டின்படி 50 நாடுகளில் 44 வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த அறிக்கையினை U.S. சேம்பர் ஆஃப் காமர்ஸ் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கை மையம் வெளியிட்டது. (GIPC)

 அறிவியல் மற்றும் புதுமையான ஆராய்ச்சி அகாடமி (ACSIR) என்பது தமிழ் நாட்டிலுள்ள சென்னையில் CSIR வளாகத்தில் உள்ளது. முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை வழங்குவதற்காக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.

 மணிப்பூரின் புதிய உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி அபிலாஸ் குமாரி பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூரின் ஆளுநனர் நஜ்மா ஹெப்துல்லா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களால் “ஸ்வச் பாரத் சனிட்டியன் பார்க்” டெல்லியில் தொடங்கப்பட்டது.

 பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்புற எழை மக்களுக்கு 39.25 லட்சம் வீடுகள் வழங்கப்படுகின்றன.

 யுனானி மருத்துவத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கி நடைபெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!