நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 23,24 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 23,24 2018

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 23 – சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம்

  • செப்டம்பர் 24-30, 2018 நடைபெறும் காது கேளாதோர் சர்வதேச வாரத்தின் ஒரு பகுதியாக 2018 செப்டம்பர் 23 அன்று சைகை மொழிகளுக்கான முதல் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

2018 தீம் – “With Sign Language, Everyone is Included!”

தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ராஞ்சியில் துவக்கி வைத்தார் பிரதமர்

  • ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சுகாதார உறுதி அளிப்புத் திட்டம்: ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

ஜர்சுகுடா விமான நிலையத்தை பிரதமர் துவக்கி வைத்தார்

  • ஒடிசாவில், பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜர்சுகுடா விமான நிலையம் மற்றும் ஜர்சுகுடா – ராய்ப்பூர் மார்க்கத்தில் உடான் விமான சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.

பஞ்சாப்

அகில இந்திய வானொலியின் 20kW FM டிரான்ஸ்மிட்டர் திறக்கப்பட்டது

  • அமிர்தசரஸின் அட்டாரி சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கரிண்டாவில் உள்ள அகில இந்திய வானொலியின் 20kW FM டிரான்ஸ்மிட்டர் சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தளுக்கான மத்திய அமைச்சர் முறையாக விஜய் சம்பலா திறந்துவைத்தார்.

சிக்கிம்

பாக்யாங் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்

  • பிரதமர் திரு.நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்தில் பாக்யாங் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார். இமாலய மாநிலத்தின் முதல் விமான நிலையம் உருவாகியுள்ளது, இது நாட்டின் 100-வது விமான நிலையம் ஆகும்.

சர்வதேச செய்திகள்

நேபாளம் தனது புலி எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் உலகின் முதல் நாடு

  • நேபாளம் தனது புலி எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் உலகின் முதல் நாடாக வாய்ப்பு. அந்த நாட்டில் 2009ல் சுமார் 121 புலிகள் இருந்தது தற்போது 235 காட்டுப் புலிகள் உள்ளன எனத் தெரிவித்த நேபாளம், கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.

மாலத்தீவு ஜனாதிபதி தேர்தல்

  • மாலத்தீவில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றார்.

அறிவியல் செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ்ஸின்  முதல் நிலவு விமானப் பயணியாக ஜப்பானின் மேசாவா அறிவிப்பு

  • ஸ்பேஸ் எக்ஸ்,எலான் மஸ்க்-ன் விண்வெளி போக்குவரத்து நிறுவனம் அதன் முதல் நிலவு தனியார் விமானப் பயணியாக ஜப்பானிய பில்லியனர் யுசாகு மேசாவா அறிவிப்பு.

ஜப்பானின் இரு துள்ளல் ரோவர்கள் வெற்றிகரமாக உடுக்கோள் ரிகுவில் தரையிறங்கின

  • உலகில் முதன்முதலாக MINERVA-II1 (உடுக்கோளுக்கான மைக்ரோ நானோ சோதனை ரோபோ வாகனம், இரண்டாவது தலைமுறை) இரண்டு ரோபோ ரோவர்ஸை வெற்றிகரமாக ஜப்பான் விண்வெளி நிறுவனம் JAXA மூலம் உடுக்கோள் ரிகுவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டன.

தரவரிசை & குறியீடு

எளிய வாழ்க்கைக்கான குறியீடு-2018

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம், இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.

எளிய வாழ்க்கைக்கான சிறந்த விருது

  • 1) ஆந்திரா 2) ஒடிசா 3) மத்தியப் பிரதேசம்

மாநாடுகள்

தேசிய மின்-சட்டப் பேரவை செயலி குறித்த தேசிய பயிலரங்கு

  • தேசிய மின்-சட்டப்பேரவை செயலி (National e-Vidhan Application – NeVA) குறித்த இரண்டுநாள் பயிலரங்கு தில்லியில் இன்று தொடங்கியது. நிகழ்ச்சியை மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கிவைத்து தலைமை தாங்கினார்.

.நா பொதுச்சபையின் 73 வது அமர்வுக்கூட்டம்

  • வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா. பொதுச் சபையின் 73வது அமர்வுக்கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல இருதரப்பு மற்றும் பல பன்னாட்டு சந்திப்புகளை தனது உலகளாவிய பங்குதாரர்களுடன் நடத்தினார்.

“முஷாயிரா

  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் சிறுபான்மையின நல அமைச்சகம் முஷாயிரா – கவியரங்கத்தை நடத்துகிறது. மகாத்மா காந்தியின் போதனைகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, நாடுமுழுவதும் இந்தக் கவியரங்கம் நடத்தப்படவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பி.எஸ்.என்.எல்சாப்ட்வங்கி, என்.டி.டியுடன் 5ஜி அலைவரிசைக்காக ஒப்பந்தம்

  • பி.எஸ்.என்.எல் இந்தியாவின் 5ஜி அலைவரிசை மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐ.ஓ.டி) தொழில்நுட்பத்தை கொண்டுவர ஜப்பானின் சாப்ட்வங்கி மற்றும் என்.டி.டி. கம்யூனிகேஷன்ஸ் ஆகியோருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பாதுகாப்பு செய்திகள்

இந்தியா வெற்றிகரமாக பிருத்வி பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்தது

  • ஒடிசா கடற்கரையிலிருந்து இந்தியா வெற்றிகரமாக பிருத்வி ஏவுகணையை சோதனை ஒன்றை நடத்தியது, இதன்மூலம் இரண்டு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வளர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்தது.

விருதுகள்

  • மாற்று நோபல்பரிசு என்றழைக்கப்படும் ரைட் லிவ்லிஹூட் விருது – அப்துல்லா அல் ஹமீத், முகமது ஃபாஹத் அல்-காஹ்தானி மற்றும் வலீத் அபு அல்-கைர் [சவுதி அரேபியா]
  • 2018 கௌரவ விருது – குவாத்தமாலாவின் தெல்மா ஆல்டானா மற்றும் கொலம்பியாவின் இவன் வெலாஸ்கெஸ்.

விளையாட்டு செய்திகள்

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், ஸ்லோவாகியா

  • 86 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா வெள்ளி பதக்கம் வென்றார்.
  • நவீன் சிஹாக் 57 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சீன ஓபன் பேட்மிண்டன்

  • இந்தோனேசியாவின் ஆன்டோனி சினிசுகா கின்டிங் ஜப்பானின் கெண்டோ மொமோட்டாவை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் சீன ஓபன் பட்டத்தை வென்றார். ஸ்பெயினின் கரோலினா மரின் சீனாவின் சென் யூபெய்யை தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா நுழைந்தது

  • துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் நான்கு போட்டியில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா. விக்கெட் வீழ்ச்சியின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 23,24 2018 வினா விடை

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!