நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 22 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 22 2018

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 22 – உலக ரைனோ(காண்டாமிருகம்) தினம்

  • உலக ரைனோ(காண்டாமிருகம்) தினம் 2010ல் WWF- தென்னாப்பிரிக்காவால் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில், உலக ரைனோ தினம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய காண்டாமிருக வகைகளை உள்ளடக்கிய சர்வதேச வெற்றியாக வளர்ந்தது. இது ஐந்து வகையான ரைனோவைக் கொண்டாடுகிறது: கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்ரன் மற்றும் ஜாவன் ரைனோக்கள்.

தேசிய செய்திகள்

புது தில்லி

தக்ஷிணா பாரத் இந்தி பிரசார் சபாதிறக்கப்பட்டது

  • புது தில்லியில் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபைக்கான நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

அசாம்

ஆஸ்கார் 2019க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக அசாமியத் திரைப்படம் தேர்வு

  • அசாம் திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ ஆஸ்கார் 2019க்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ரீமா தாஸால் இயக்கபட்டது .

மகாராஷ்டிரம்

ஸ்டார்ட் அப் யாத்திரை தொடங்கப்பட்டது

  • மகாராஷ்டிர அரசு எதிர்கால தொழிலதிபர்களை கிராமப்புறங்களில் தேட ஒரு ஸ்டார்ட் அப் யாத்திரையை தொடங்கப்பட்டது.

சர்வதேச செய்திகள்

ரஷ்யாவும், துருக்கியும், வட சிரியாவில் இராணுவமல்லாத மண்டல எல்லைக்கு ஒப்புதல்

  • ரஷ்யாவும் துருக்கியும் வடக்கு சிரியாவில் ஒரு இராணுவமல்லாத மண்டல எல்லைக்கு ஒப்புதல்.

இந்தியா, நேபாளம் எல்லை ஆய்வுப் பணியில் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்த ஒப்புதல்

  • இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவை எல்லை ஆய்வுப் பணியில் அதிக தெளிவான செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய ஒப்புக்கொண்டன.

ஹாங்காங் பிரதான சீனாவுடன் அதிவேக இரயில் இணைப்பைத் திறக்கிறது

  • ஹாங்காங் பிரதான சீனாவுடன் புதிய அதிவேக இரயில் இணைப்பைத் திறந்தது, அது பயண நேரங்களை குறைக்க உதவும்.

அறிவியல் செய்திகள்

இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்கான ஏவுதளத்தை அமைக்கிறது

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ), ககன்யான் – மனிதரைக் கொண்டு செல்லும் விண்வெளி விமான திட்டத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளப் பாதையை அமைக்கிறது.

வணிகம் & பொருளாதாரம்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு KYC விதிமுறைகளை SEBI தளர்த்தியது

  • இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், செபி திருத்தியமைக்கப்பட்ட உங்கள் வாடிக்கையாளரை பற்றி அறியும் (KYC) விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது, இது வெளிநாட்டு இலாகா முதலீட்டாளர்களுக்கு, FPI நிவாரணமாக அமைந்துள்ளது.
  • புதிய விதிமுறைகளின் கீழ் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்போர் அல்லாத இந்தியர்கள் அத்தகைய நிறுவனங்களில் கட்டுப்பாடற்ற பங்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநாடுகள்

காமன்வெல்த் பாராளுமன்றம் சங்கத்தின் இந்தியப் பிராந்திய-IV மாநாடு

  • இமாச்சல பிரதேசத்தில், இரண்டு நாள் காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய-IV, மாநாடு மற்றும் வொர்க்ஷாப் சிம்லாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜார்கண்ட் அரசு என்..சி.எல் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டது

  • தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் உடன் இணைந்து, ஜார்க்கண்ட் அரசு, மத்திய அரசின் முதன்மை சுகாதார திட்டம் – ஆயுஷ்மன் பாரத் யோஜனாவின் கீழ் மாநில மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

விளையாட்டு செய்திகள்

ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

  • கத்தார் டோகாவில் ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 2-3 என்ற வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.

டிராக் ஆசியா கோப்பை

  • புது தில்லியில் 5வது டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டத்தின் தொடக்க நாளில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது. மயூரி லுட் மகளிர் ஜூனியர் 500 மீட்டர் பந்தயத்தில் நாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 22, 2018 வினா விடை

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!