நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 14 , 2019

0
நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 14 , 2019
நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 14 , 2019

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 14 , 2019

உலக முதலுதவி தினம் எந்த தேதியில்அனுசரிக்கப்படுகிறது??

உலக முதலுதவி தினம் என்பது செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு செப்டம்பர் 14,2019 அன்று கொண்டாடப்படுகிறது, இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தீம்: “முதலுதவி மற்றும் விலக்கப்பட்ட மக்கள்”.

தேவனாகிரியில் எழுதப்பட்ட இந்தி எப்போது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

இந்தி திவாஸ் செப்டம்பர் 14 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று தேவநாகரியில் எழுதப்பட்ட இந்தியை அரசியலமைப்பு சபை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.

மத்திய அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத்தால் கடல்சார் தகவல் தொடர்பு சேவைகள் எங்கு தொடங்கப்பட்டது?

“கடல்சார் தகவல் தொடர்பு சேவைகளை” மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் மும்பையில் தொடங்கினார்.

‘COP 14 UNCCD: TRIFED-GIZ’ இல் பழங்குடி நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய பழங்குடி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?

மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா நாட்டில் பழங்குடியின நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய பழங்குடி இயக்கத்தை தொடங்கினார்.

நாடு முழுவதும் எத்தனை ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது?

மத்திய அரசு நாடு முழுவதும் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் நான்காயிரம் இந்த ஆண்டில் அமைக்கப்படும்.

இந்தியாவில் இருந்து 600 மெகாவாட் மின்சாரத்தை எந்த நாடு இறக்குமதி செய்துள்ளது?

பங்களாதேஷ் அரசு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கிடைக்க, மின்சாரம் இறக்குமதி செய்வதற்கும் மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்கும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எந்தப் பொருளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த ஒரு டன்னுக்கு 850 அமெரிக்க டாலர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது ?

வெங்காயத்தின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு விலைகளைக் குறைக்கவும் அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசாங்கம் ஒரு டன்னுக்கு 850 அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டது.

இந்தியாவில் உணவு பூங்காக்களுக்கு ரூ .3,000 கோடி உதவி வழங்க எந்த வங்கி முன்வந்துள்ளது?

நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய உணவு பூங்காக்களுக்கு உலக வங்கி மூவாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளது என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

15 வது இந்தோ-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?

15 வது இந்தோ-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாட்டை , இந்தோ-அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ்- வட இந்தியா கவுன்சில் (ஐஏசிசி- என்ஐசி) புதுடில்லியில் ஏற்பாடு செய்தது.

பசுமை முயற்சிகள் குறித்து இந்திய ரயில்வே எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

பசுமை முயற்சிகளை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே, புதுதில்லியில் உள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

எத்தனை பெண் காவல்துறை அதிகாரிகள் தென் சூடானில் ஐ.நா. பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர்?

ஐந்து இந்திய பெண் போலீஸ் அதிகாரிகள் தெற்கு சூடானில் ஐ.நா. பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் யார்?

18 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இந்த அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது . இந்த தொடர் இங்கிலாந்தின் மார்லோவில் இந்த மாதம் 27 முதல் அடுத்த மாதம் 4 வரை நடைபெற உள்ளது. கோல்கீப்பர் சவிதா புனியா துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2020 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை எந்த நாடு நடத்தவுள்ளது?

ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை அடுத்த ஆண்டு நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியா நடத்தவுள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here