நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 08 & 09 , 2019

0
நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 08 & 09 , 2019
நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 08 & 09 , 2019

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 08 & 09 , 2019

சர்வதேச எழுத்தறிவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச எழுத்தறிவு தினம், அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் பங்குதாரர்களுக்கு உலக கல்வியறிவு விகிதங்களில் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தவும், உலகின் மீதமுள்ள கல்வியறிவு சவால்களை பிரதிபலிக்கவும் ஒரு வாய்ப்பாகும்.

'பால்பசேரா' திட்டத்தால் யாருடைய குழந்தைகள் பயனடைவார்கள்?

எய்ம்ஸ் ரிஷிகேஷில் உள்ள சி.பி .டபிள்யூ.டி ஆதரவுடன், அங்கு வேலை ,செய்யும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனுக்கான, சிபிடபிள்யூடி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திருமதி தீபா சிங் ஒரு திட்டத்தை 09.09.2019 அன்று திறந்து வைத்தார்.

இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது ?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் 371 வது பிரிவு ரத்து செய்யப்படாது என்று கூறினார். குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு கவுன்சிலின் (என்.இ.சி) 68 வது மாநாட்டில் உரையாற்றிய திரு ஷா, 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 371 வது பிரிவும் ரத்து செயப்படுமோ என்று மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

வரையாடு எந்த மாநிலத்தின் மாநில விலங்கு?

2018 இல் முகூர்த்தி தேசிய பூங்காவில் 568 ஆக இருந்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 612 ஆக உயர்ந்துள்ளது. இந்த பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை இரண்டாண்டுகளாக அதிகரித்து கொண்டிருக்கின்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர், அதாவது 2016 முதல் நீலகிரி ஐபெக்ஸ் என்றழைக்கப்படும் வரையாட்டின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

சூறாவளி ஃபாக்சாய்சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது?

ஜப்பானின், டோக்கியோ பெருநகரப் பகுதி ஃபாக்சாய் என்றழைக்கப்படும் பலத்த சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .டோக்கியோ விரிகுடா வழியாக, மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், தலைநகருக்கு கிழக்கே சிபாவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்பிட்டரில் உள்ள எந்த கருவி லேண்டர் விக்ரமை சந்திரனின் மேற்பரப்பில் கண்டறிந்தது?

ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள ‘இமேஜிங் இன்ஃப்ரா-ரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர்’ மூலம் படம் பிடிக்கப்பட்டு லேண்டர் விக்ரம் கண்டறியப்பட்டுள்ளது. இமேஜிங் இன்ஃப்ரா-ரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்பது சந்திரனில் உள்ள தாதுக்களின் தன்மையைப் படிப்பதற்கும் நீர் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் சந்திரயான் -2 இன் ஆர்பிட்டரில் உள்ள ஒரு கருவியாகும்.

இந்திய ஜனாதிபதியால் தேசிய இளைஞர் உச்சி மாநாடு எங்கே திறக்கப்பட்டது

காஜியாபாத்தின் “பவன் சிந்தன் தாரா அறக்கட்டளையின் இளைஞர் பிரிவான இளைஞர் விழிப்புணர்வு மிஷன்” ஏற்பாடு செய்துள்ள தேசிய இளைஞர் உச்சி மாநாட்டைத் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், செப்டம்பர் 7, 2019 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இந்தியா எப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினரானது ?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளுக்கான இராணுவ மருத்துவத்தின் முதல் மாநாடு 2019 செப்டம்பர் 12 – 13 அன்று நடைபெறும். இந்த மாநாடு எஸ்சிஓ பாதுகாப்பு கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இந்தியா நடத்தும் முதல் ராணுவ ஒத்துழைப்பு நிகழ்வாககும். இது 2017 இல் இந்தியா எஸ்சிஓ உறுப்பு நாடாக மாறிய பிறகு நடைபெறும் ஒத்துழைப்பு நிகழ்வாககும்.

24 வது உலக எரிசக்தி காங்கிரஸ் எந்த நாட்டில் நடைபெற்றது?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆதரவின் கீழ் 24 வது உலக எரிசக்தி காங்கிரஸ் அபுதாபியில் தொடங்கவுள்ளது. நான்கு நாள் உலக எரிசக்தி காங்கிரஸின் நோக்கம் அரசாங்கங்கள், தனியார் மற்றும் மாநில நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட சர்வதேச எரிசக்தி பங்குதாரர்களை ஒன்றிணைப்பதாகும்.

துலீப் டிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

பெங்களூருவில் நான்காவது நாள் நடந்த துலீப் டிராபி போட்டியில் இந்தியா ரெட் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா க்ரீனை வீழ்த்தியது. இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 388 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யு -19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த நாடு வெற்றி பெற்றது?

இலங்கையில் மொரட்டுவாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

ரஃபேல் நடால் யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இது அவரது நான்காவது யுஎஸ் ஓபன் பட்டமும் 19 வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையும் ஆகும்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

19 வயதான பியான்கா ஆண்ட்ரெஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றார். 1990 ஆம் ஆண்டில் மோனிகா செலெஸுக்குப் பிறகு தனது நான்காவது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கோப்பையை வென்ற முதல் பெண் இவர் ஆவார். கனடாவிலிருந்து கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனையும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here