நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 23 2018
கேமரூனில், எந்த ஆண்டிலிருந்து நாட்டின் ஜனாதிபதியாக பவுல் பியா பதவி வகித்து வருகிறார்?
கேமரூனில், 1982ல் இருந்து நாட்டை ஆட்சி செய்யும் பவுல் பியா, ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஜனாதிபதியாக பதவி வகிக்க உள்ளார்.
புது தில்லியில் உடல் மற்றும் மனநல குறைபாடுகளின் தேசிய ஒர்க்ஷாப்பை யார் தொடங்கி வைத்தது?
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட், உடல் மற்றும் மனநல குறைபாடுகளின் தேசிய ஒர்க்ஷாப்பை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
2018 ஐ.நா. தின கச்சேரியில் யார் அரங்கேற்றம் செய்யவுள்ளார்?
பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் 2018 ஐ.நா. தின கச்சேரியில் அரங்கேற்றம் செய்யவுள்ளார்.
2017- 2018 ஹரித் தீபாவளி, ஸ்வஸ்த் தீபாவளி [பசுமை தீபாவளி, ஆரோக்கியமான தீபாவளி] பிரச்சாரத்தை எந்த அமைச்சகம் துவக்கியது?
சுற்றுச்சூழல் அமைச்சகம் ஹரித் தீபாவளி, ஸ்வஸ்த் தீபாவளி (பசுமை தீபாவளி, ஆரோக்கியமான தீபாவளி) பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. இந்த பிரச்சாரம் 2017-18ல் ஆரம்பிக்கப்பட்டது, இதில் அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர் மற்றும் பட்டாசுகளை குறைத்து வெடிக்கக் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்?
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் தகுடோ ஓடோகுரோவிடம் தோல்வியடைந்தார்
எந்த நாட்டின் சர்வதேச வெப்பநிலை அணுசக்தி பரிசோதனை மையத்தின் ஆராய்ச்சி திட்டத்திற்கு உபகரணங்கள் வழங்குவதில் இந்தியா முன்னணி வகிக்கிறது?
பிரான்ஸ் நாட்டின் சர்வதேச வெப்பநிலை அணுசக்தி பரிசோதனை மையத்தின் ஆராய்ச்சி திட்டத்திற்கு உபகரணங்கள் வழங்குவதில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது
"குஷி" எனும் செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை எந்த வங்கி வெளியிட்டது?
காப்பீட்டுத் தொடர்பான தகவல், எந்த நேரத்திலும், கொள்கை அம்சங்கள், பிரீமியம் தொடர்பான விவரங்கள் போன்றவை, நிதி மதிப்பு மற்றும் போர்ட்ஃபோலியோ விவரங்களை ஒரே இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் குஷி செயலி மூலம் வழங்கும்.
ஆரவல்லி மலையில் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்திற்குள் மூட உச்ச நீதிமன்றம் எந்த மாநிலத்திற்கு உத்தரவிட்டது?
ஆரவல்லி மலையில் சட்டவிரோத சுரங்கங்களை 48 மணி நேரத்திற்குள் மூட உச்ச நீதிமன்றம் இராஜஸ்தான் மாநிலத்திற்கு உத்தரவிட்டது.