நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 16 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 16 2018

சமீபத்தில் உயர்தர மத்திய சேமிப்புக்கிடங்கு எங்கு திறந்துவைக்கப்பட்டது?

குருகிராம், பிலாஸ்பூரில்[அரியானா] உயர் தர மத்திய சேமிப்புக்கிடங்கு கழகத்தை, இரசாயனம், உரங்கள், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் துறை அமைச்சர் மான்சூக் மாண்டவியா துவக்கிவைத்தார்.

தேசிய ஹோமியோபதி நிறுவனத்திற்கு எங்கு அடிக்கல் நாட்டப்பட்டது?

மத்திய மாநில ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ ஷிரிபத் எஸ்ஸோ நாயக் நரேலாவில் ஹோமியோபதி தேசிய நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்

யுஏஇ-இந்தியா முதலீடுகளின் உயர் நிலை கூட்டுப் பணிக்குழுவின் 6 வது கூட்டம் எங்கு நடைபெற்றது?

இரு நாடுகளுக்கும் இடையில் எந்தவொரு வர்த்தக சிக்கல்களையும் முதலீடு செய்வதற்கு இடையூறுகளையும் தீர்க்க இந்தியா ஒரு விசேஷ யு.ஏ.இ மேசை ஒன்றை அமைக்கத்திட்டம் என மும்பையில் நடந்த யுஏஇ-இந்தியா முதலீடுகளின் உயர் நிலை கூட்டுப் பணிக்குழுவின் 6 வது சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு இவ்வாறு அறிவித்தார்.

புது தில்லியில் 6 வது சர்வதேச பட்டு கண்காட்சியை (IISF) யார் தொடங்கிவைத்தது?

ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி புது தில்லி பிரகதி மைதானத்தில் 6 வது சர்வதேச பட்டு கண்காட்சியை (IISF) திறந்து வைத்தார்

ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி - சந்தீப் பக்ஷி

எந்த ஆண்டுக்குள் 50% சாலை விபத்துகளை குறைப்பதற்கான இலக்கை அடைய உதவும் பயிற்சி திட்டத்தை அரசு துவக்கியது?

2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளை 50 சதவிகிதம் குறைப்பதற்கான இலக்கை அடைய உதவும் இளைஞர் சாலை பாதுகாப்பு கற்றோர் உரிம திட்டத்தை அரசு துவக்கியது.

எந்த நகரத்தின் பெயரை பிரயாக்ராஜாக மாற்ற உத்தரப்பிரதேச மந்திரி சபை முடிவு செய்துள்ளது?

உத்தரப்பிரதேச அமைச்சரவை அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜாக மாற்ற ஒப்புதல்

இளைஞர் ஒலிம்பிக்கில் ஆண்கள் 5000 மீட்டர் பந்தயத்தில் வெள்ளி வென்றவர் யார்?

அர்ஜென்டினாவில் ஆண்கள் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் சூரஜ் பன்வார் வெள்ளி வென்றார்.

உலக உணவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?

அக்டோபர் 16 - உலக உணவு தினம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு நிறுவப்பட்டதன் நினைவாக அக்டோபர் மாதம் 16ந் தேதி உலக உணவு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here