நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 12 & 13 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 12 & 13 2019

நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Video கிளிக்செய்யவும்

சர்வதேச செவிலியர்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

குக்கரஹல்லி ஏரி புகைப்பட கண்காட்சி எங்கு நடைபெற்றது ?

குக்கரஹல்லி ஏரியில் வாழ்க்கை” எனும் தலைப்பில், புகைப்பட கண்காட்சி இந்த ஏரி அருகே திறக்கப்பட்டது. வைல்ட் மைசூரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக சுற்றுச்சூழல் ஆதரவுடன் கூடிய பல்வேறு வாழ்க்கை வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்ற 45 இயற்கை ஆர்வலர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் மின் கணினிகளுக்கு இலவச ஓஎஸ் வழங்கப்படவுள்ளது ?

கேரள மாநிலத்தின் பள்ளிகளில் உள்ள 2,00,000 க்கும் மேற்பட்ட கணினிகள் விரைவில் கல்வி மற்றும் பொது நோக்கங்களுக்காக பல்வேறு வகையான பயன்பாடுகள் வழங்கும் லினக்ஸ் சார்ந்த ஃப்ரீ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய பதிப்பால் இயங்கும். உபுண்டு ஓஎஸ் எல்.டி.எஸ் பதிப்பின் அடிப்படையில், மாநில பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பல இலவசப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

‘மழையை–விரும்பும்‘ பாம்பு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மழையை விரும்பும் ஒரு புதிய பாம்பு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞானத்துக்கு புதியது, இந்த கண்டுபிடிப்பானது உள்ளூரில் மழையை-விரும்பும் பாம்பு என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேச செவிலியர் நாள் 2019 இன் தீம் என்ன?

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.2019 தீம் – ‘Nurses: A Voice to Lead, Health for All.’

ஐபிஎல் போட்டித் தொடரில் எத்தனையாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது?

12வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர். இந்த ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் போட்டித் தொடரில் 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தியா எந்த நாட்டுடன் அணு சக்தி, பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது ?

பாதுகாப்புத்துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியாவும் வியட்நாமும் உடன்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அருகில் ‘நாசவேலை செயல்கள்‘ புரியும் மாலுமிகளுக்கு எந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது ?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பிராந்திய அழுத்தங்களுக்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தின் கடலோரப் பகுதிகள் அருகே “நாசவேலை செயல்கள்” புரியும் மாலுமிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here