நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 10 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 10 2019

நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Video கிளிக்செய்யவும்

சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை வென்றவர் யார்?

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து ஆட்டக்காரர் லூக் ஷா 2018-19 ஆண்டின் சிறந்த சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை வென்றார். சர் மேட் பஸ்பி பிளேயர் விருதை இவர் பெறுவது முதல்முறையாகும்.

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX) 2019 எங்கு நடைபெறவுள்ளது?

இந்திய கடற்படை கப்பல்கள் கொல்கத்தா மற்றும் சக்தி உட்பட அனைத்து கூட்டுப்பயணத்தில் பங்குபெறும் கப்பல்களும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX) 2019ல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே இந்திய மிளகாயை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது?

இந்திய வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வதவான் மற்றும் சீன பொது நிர்வாகத் துறை அமைச்சர், லீ குவாவும் புதுடில்லியில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து சீனாவிற்கு இந்திய மிளகாயை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம். இவர் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக குரோஷியா நாட்டைச்சேர்ந்த இகோர் ஸ்டிமாக் தனது பணியை தொடங்க இருக்கிறார். அவர் 3 ஆண்டு காலம் இந்த பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் மெகா அறிவியல் கண்காட்சி எங்கு நடைபெறவுள்ளது?

இந்தியாவின் முதல் மெகா அறிவியல் கண்காட்சி விஞ்ஞாண் சமாஜம் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. இந்தக் கண்காட்சி அணு சக்தி துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில் வங்கி கடன் எத்தனை சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது?

முந்தைய நிதியாண்டு வங்கி கடன் 10.3%-த்தை ஒப்பிடும்போது, 2018-19 நிதியாண்டில் வங்கி கடன் 13.2% வளர்ச்சியுற்றுள்ளது. இந்த ஆண்டு குறிப்பாக சேவைகள் மற்றும் சில்லரை துறைகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

எந்த நகரில் உயிரியல் மற்றும் வேதியியல் நாசவேலைகளை சமாளிக்க போலீசார் தயார்நிலையில் உள்ளனர்?

சென்னை நகரில் உயிரியல் மற்றும் வேதியியல் நாசவேலைகளை சமாளிக்க சென்னை போலீசார் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) தொழில்நுட்ப உதவியுடன், நகர்ப்புற போலீஸ், அதன் ரோந்து வாகனங்களில் மொபைல் கதிரவீச்சு கண்டறிதல் அமைப்பு (MRDS) சாதனங்களை நிறுவியுள்ளது.

உலக பல்லுறுப்பு நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

மிகக்கொடுமையான பல்லுறுப்பு நோயை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 10ம் தேதி ‘உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

எந்த மாநில போலீஸ் துறையின் புதிய ஆயுதமாக 'சக்தி' விளங்குகிறது?

போலீஸ் துறையின் புதிய ஆயுதமாக 'சக்தி' விளங்குகிறது, இது பெண்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் காயப்படுத்துதலிருந்து பாதுகாப்பதற்காக திறம்பட உதவுகிறது. துயரத்தில் உள்ள பெண்களை காப்பாற்றுவதற்காக 'நீல நிறத்தில் பெண்கள் [‘Women in blue’] குழு உருவாக்கப்பட உள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here