நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 09 & 10, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 09 & 10, 2019

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ .6,000 வழங்கப்படும் திட்டம் எது?

நாடு முழுவதும் உள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வு எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?

சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி ராஞ்சியில் உள்ள பிரபாத் தாராவில் ஜூன் 21, 2019 அன்று நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்த உள்ளார்.

மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது?

மும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. தற்போதுள்ள மும்பை மெட்ரோ மத்திய கட்கோபர் மற்றும் தலைநகரின் மேற்குப் பகுதியான வெர்சோவாவை இணைக்கிறது.

“2031 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்வாழ்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடு?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, 2031 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வு திட்டத்தை அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது. கொள்கை வகுப்பதற்கான செயல்முறைக்கு உதவும் ‘தேசிய நல்வாழ்வு ஆய்வுமையம்’ உருவாக்குவது என்பது இந்த முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அளவு எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது?

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து பொருட்களின் மீதான 200 சதவீத சுங்க வரி விதிப்பைனால் இந்த ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இறக்குமதிகள் 92 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.84 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.

ஜி 20 நாடுகள் எந்த நகரத்தில் நடத்தப்படுகின்றன?

வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை [MSME] ஊக்குவிக்க இந்தியா வலியுறுத்தல். இதை ஜப்பான் நகரமான த்சுகுபாவில் நடைபெற்ற ஜி20 நாடுகள் சந்திப்பில் வர்த்தக மற்றும் தொழிற்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

இங்கிலாந்து மற்றும் எந்த நாடு இடையே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டது?

அக்டோபர் கடைசியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு முன்னதாகவே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தென் கொரியாவும் பிரிட்டனும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல். தென் கொரிய ஏற்றுமதியான கார் பாகங்கள் மற்றும் வாகனங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இலவச வர்த்தகம் செய்ய வழிவகுக்கும்.

சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) எந்த வருடம் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்டது?

. சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) 1912 இல் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. தற்போது ஒலிம்பிக்கில் இரண்டு முறை 1500 மீட்டர் தங்கப் பதக்கம் வென்ற பிரிட்டனின் செபாஸ்டியன் கோய் தலைமையில் இந்தக் கூட்டமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றவர் யார்?

2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், லூயிஸ் ஹாமில்டன் ஏழாவது முறையாக வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார். செபாஸ்டியன் வெட்டல் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக இந்தப்போட்டியில் தண்டிக்கப்பட்டார்.

12 வது முறையாக பிரெஞ்சு ஓபன் மென்'ஸ் சிங்கிள்ஸ் பட்டத்தை வென்றவர் யார்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார். ரோலண்ட் கர்ரோஸில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியமை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் நடால் வெற்றி பெற்றார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here