நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 24, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

உலக விதவைகள் தினம் கொண்டாடப்படும் நாள்?

உலக விதவைகள் தினம் – ஜுன் 23. இத்தினமானது 2010 முதல் ஜ.நா. வால் அனுசரிக்கப்படுகிறது.

அஜுத் பாசு” என்பவர்______________________வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) நிர்வாக இயக்குநராக “ அஜுத் பாசு” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் ஆடவரக்கான__________________மீ பிரெஸ்ட் ஸ்ரோக் பிரவில் தங்கம் வென்றுள்ளார்.

சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் ஆடவரக்கான 50 மீ பிரெஸ்ட் ஸ்ரோக் பிரவில் தங்கம் வென்றுள்ளார்.

Chief minister of the year என்னும் விருது எந்த மாநில முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது?

Chief minister of the year என்னும் விருது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரததேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்புரா நீர்பாசனத் திட்டத்தை இந்திய பிரதமர் எப்போது தொடங்கி வைத்தார்?

மத்திய பிரததேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்புரா நீர்பாசனத் திட்டத்தை இந்திய பிரதமர் 23.06.18 அன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ__________________ நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.

எத்தனாவதுஉலக போரில் உயிர்நீத்த இந்தியர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் போர் நினைவகம் அமைக்கப்படவுள்ளது?

முதல் உலக போரில் உயிர்நீத்த இந்தியர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள வில்லர்ஸ் குய்ஸ்லின் என்ற இடத்தில் போர் நினைவகம் இந்தியா சார்பில் அமைக்கப்படவுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ அதிகாரி கே.எம். கரியப்பா அவர்களின் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ அதிகாரி கே.எம். கரியப்பா அவர்களின் சிலை சென்னை இரானுவ பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அரிஜித் பாசு நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 31, 2020 ல் தனது பதவி உயர்வு வரை பொறுப்பேற்ற பின்னர், எம்.எஸ். பாசு நியமிக்கப்பட்டார்.

ஈரானில் சபாஹார் துறைமுகத்தை செயல்படுத்துவதற்கு எந்த ஆண்டில் செயல்படும் இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது?

2019 ம் ஆண்டுக்குள் ஈரான் சபாஹார் துறைமுகத்தை 2019 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் முயல்கிறது. தென்கிழக்கு ஈரானில் சபாஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக, 2018 பிப்ரவரியில், ஈரான் மற்றும் இந்தியா, 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்திய விளையாட்டு நட்சத்திரமான சந்தீப் செஜ்வால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய நீச்சல் வீரர் சந்தீப் சேஜ்வால், ஆண்கள் 50 மீட்டர் மார்பக சாதனையை 27:59 விநாடிகளில் தங்கம் வென்றார். மேலும், 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நிகழ்ச்சியில் 22.68 வினாடிகளில் வித்வாவால் காடே வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன்------------------------------

செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.

உலகின் மிகச் சிறிய-----------------------------மில்லிமீட்டர் நீளமுள்ள கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த கம்ப்யூட்டர் அமைந்துள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here