நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 06, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 06, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

சர்வதேச கூட்டுறவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

ஜூலை 06 – சர்வதேச கூட்டுறவு தினம் சர்வதேச கூட்டுறவு தினம் என்பது கூட்டுறவு இயக்கத்தின் வருடாந்திர கொண்டாட்டமாகும், இது 1923 முதல் ஜூலை முதல் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் கூட்டுறவு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். 2019 தீம் : COOPS 4 DECENT WORK

காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய கவுன்சில் எதை உருவாக்கவுள்ளது ?

காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய கவுன்சில் காந்திபீடியா உருவாக்கப்படவுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2019-2020 பட்ஜெட்டில் தனது உரையில் தெரிவித்தார்

இந்தியாவின் முசோரியில் எந்த நாட்டின் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது ?

ஆயிரத்து எண்ணூறு வங்கதேச அரசு ஊழியர்களுக்கு 2019-2025 க்கு இடையில் முசோரியில் உள்ள தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் (என்.சி.ஜி.ஜி) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தியா-வங்கதேச கூட்டு ஆலோசனை ஆணையத்தின் (ஜே.சி.சி) ஐந்தாவது கூட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கதேச அரசு ஊழியர்களுக்கு தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை பங்களாதேஷில் உள்ள எந்த நகரத்தில் திறக்கப்பட்டது ?

உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனை வங்கதேசத்தின் டாக்காவில் செயல்படத் தொடங்கியது. ஷேக் ஹசீனா தேசிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 50 படுக்கையறைகள் மற்றும் 12 ஆபரேஷன் தியேட்டர்களைக் கொண்ட 500 படுக்கைகள் கொண்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்படும் வங்கதேச நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை மேம்பட்ட சிகிச்சையளிக்க உதவும்.ci

இந்திய விண்வெளி துறையின் புதிய வர்த்தக நிறுவனமாக எந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது?

விண்வெளி துறையின் புதிய வர்த்தக நிறுவனமாக புதிய விண்வெளி இந்தியா நிறுவனம் விண்வெளித் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஐ.எஸ்.ஆர்.ஒ மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் மேம்பாடுகளின் பலன்களை உபயோகிக்கும் வகையில், விண்வெளி துறையின் புதிய வர்த்தக கிளையாக புதிய இந்திய விண்வெளி நிறுவனம் என்ற பொது துறை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் எவ்வளவு மூலதன முதலீடு செய்ய வேண்டும் என்று யூனியன் பட்ஜெட் சமீபத்தில் முன்மொழிந்தது?

பொதுத்துறை வங்கிகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்வதற்கான திட்டம் அவர்களுக்கு கடன் வழங்குவதை எளிதாக்க உதவும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.

தீயணைப்பு சேவை பிரிவு, சிவில் சர்வீசஸ் மற்றும் ஹோம் கார்டுகளுக்கான பொது இயக்குனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

கடந்த ஆண்டு சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுக்கு பதிலாக இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர் ராவ், தற்போது தீயணைப்பு சேவை பிரிவு, சிவில் சர்வீசஸ் மற்றும் ஹோம் கார்டுகளுக்கான பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்கில் அஞ்சலி பாடலின் இசையமைப்பாளர் யார்?

இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸின் 20வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடும் நிலையில், புது தில்லியில் உள்ள மானெக்‌ஷா மையத்தில் ஒரு பிரமாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1999 கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களை கவுரவிக்கவும், வீர வணக்கம் செலுத்தவும் கார்கில் அஞ்சலி பாடல் ஒன்றை இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் வெளியிட்டார். இந்தப்பாடலை புகழ்பெற்ற இந்தி பாடலாசிரியர் திரு சமீர் அஞ்சான் இசையமைத்துள்ளார், திரு சதாத்ரு கபீர் பாடியுள்ளார், திரு ராஜு சிங் இசையமைத்துள்ளார்.

வலுவான மீன்வள மேலாண்மை கட்டமைப்பை நிறுவுவதற்கான புதிய திட்டம் என்ன?

மீன்வள மேலாண்மை கட்டமைப்பு, மீன்வளத் துறை வாயிலாக அமைக்கப்படும் – உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல், உற்பத்தி, உற்பத்தித் திறன், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கலான இடைவெளிகளுக்கு இந்த பிரதமர் மத்சய சம்பதா திட்டம் மூலம் தீர்வு காணப்படும்.

வில்வித்தை உலகக் கோப்பை நிலை IV எந்த நகரத்தில் நடைபெற்றது?

பெர்லினில் நடைபெறும் வில்வித்தை போட்டியில், இந்தியாவின் அதுல் வர்மா மற்றும் லைஷ்ராம் பம்பாய்லா தேவி கலப்பு இரட்டையர்கள் பிரிவில் வெண்கல பதக்கச்சுற்றிற்கு தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள இந்திய ஜோடி அரையிறுதியில் கொரியாவிடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, இதனால் ஏழாம் இடத்தில் உள்ள இத்தாலி இணையுடன் வெண்கல பதக்கதிற்கான போட்டியில் மோதவுள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019 video – Click Here

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here