நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 07, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 07, 2019

எந்த மாநிலத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ராவை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்?

அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு இட்டாநகர் மாநில செயலகத்தில் இருந்து அருணாச்சல மாநிலத்தின் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ராவை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நேட்டோவில் அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் எத்தனாவது உறுப்பினராக ஆவதற்கு மாசிடோனியா உடன்படிக்கையில் கையெழுத்திட்டது?

நேட்டோவில் அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் 30வது உறுப்பினராக ஆவதற்கு மாசிடோனியா உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. மாசிடோனியா-நேட்டோ ஒப்பந்தம் கிரீஸ் நாட்டுனான மாசிடோனியாவின் பெயரைப் பற்றிய 27 ஆண்டுகால சர்ச்சையை ஒப்பந்தம் மூலம் முடித்தது. இந்த உடன்படிக்கையை கூட்டணி அரசாங்கங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசு எந்த மாநிலத்தில் 58 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யதுள்ளது?

மத்திய அரசு இமாச்சல பிரதேசத்தில் 58 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யதுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார்?

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 25% குறைத்து 6.50% சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

எந்த அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது?

சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.

நிலத்தடி நீரின் நிலையான மேலாண்மைக்காக அடல் புஜல் யோஜனா (ஏபிஹைஐ) எந்த வங்கியை அங்கீகரிக்கிறது?

ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் புஜல் யோஜனா (ABHY) திட்டம் – நிலத்தடி நீரை சமூக பங்கேற்புடன் நிலையான மேலாண்மை திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல். இந்திய அரசு மற்றும் உலக வங்கி 50:50 என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்க உள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

உலக சாம்பியன் இந்திய வீரர் சைகோம் மீராபாய் சானு தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். சானு 49 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். வெள்ளிப் பதக்கத்துக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 192 கிலோ எடையை தூக்கி சாம்பியனானார் மீராபாய் சானு.

இந்தோ-ஆப்பிரிக்கா மூலோபாய பொருளாதார கூட்டுறவு மாநாடுகள் எங்கு நடைபெற்றது?

புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-ஆப்பிரிக்க மூலோபாய பொருளாதார கூட்டுறவு தொடர்பான பேச்சுவார்த்தைக் கூடத்தில் மத்திய வர்த்தக, தொழில்துறை மற்றும் உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உரையாற்றினார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here