நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 09,10 2018

0
318

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 09,10 2018

மனித உரிமைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் தினம் மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் 70 வது ஆண்டு நிறைவை குறிக்கும்.

நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?

மொஹாலியில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளி வளாகத்தில் முதலாவது சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘நீடித்த நீர் மேலாண்மை’ என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும்.

ரஷ்ய பாராளுமன்றத்தின் பெயர் என்ன?

ரஷ்ய பாராளுமன்ற 'டுமா'வின் தலைவர் இந்தியா, ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் மகத்தான திறனை முழுவதுமாகத் தக்கவைக்க சட்டமியற்றும் கட்டமைப்பை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

அறிவியல் மையம் மற்றும் அருங்காட்சியக தலைமையின் 18 வது அகில இந்திய ஆண்டு மாநாடு எங்கு தொடங்கியது?

அறிவியல் மையம் மற்றும் அருங்காட்சியக தலைமையின் 18 வது அகில இந்திய ஆண்டு மாநாடு அருணாச்சல பிரதேசம், இட்டாநகரில் துவங்கியது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெறுகிறது?

முதல்-வகுப்பு அறிமுக கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்து உலக சாதனை படைத்தவர் யார்?

மத்தியப் பிரதேச தொடக்க வீரர் அஜய் ரோஹெரா தனது முதல் அறிமுக ஆட்டத்தில் அவுட் ஆகாமல் 267* ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

மிஸ் வேர்ல்ட் 2018 பட்டம் வென்றவர் யார்?

உலக அழகி 2018 - மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன்

நல் ஆளுகை – விருப்ப மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துதல்’ பற்றிய மண்டல மாநாடு எங்கு நடைபெற்றது?

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை, கேரள அரசுடன் இணைந்து நடத்தும், ‘நல் ஆளுகை – விருப்ப மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துதல்’ பற்றிய மண்டல மாநாடு, திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி ஊழல் எதிர்ப்புக்கு பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் தடுப்பு மாநாட்டின் படி, டிசம்பர் 9 அன்று சர்வதேச எதிர்ப்பு ஊழல் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here