ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 6 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 6 2018

  • தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படைகள், தீ சேவைகள் மற்றும் காவல் துறைகள், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை ஆந்திரப் பிரதேசம் முழுவதும் சர்வதேச சுனாமி டிரில் பயிற்சியில் பங்கேற்றனர்.
  • பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட விமானப் பயணிகளுக்கு முக அங்கீகார வசதியை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.
  • பெங்களூரு விண்வெளி கண்காட்சியின் 6வது பதிப்பை, இஸ்ரோ தலைவர் கே.சிவன் பெங்களூரில் தொடங்கி வைத்தார்.
  • பல்கேரியாவின் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இணைந்து, பல்கேரியாவின் சோபியாவில் உள்ள தெற்கு பார்க்கில் மகாத்மா காந்தியின் சிலை ஒன்றை திறந்துவைத்துள்ளனர்.
  • சிங்கப்பூரில் தரவு மையத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக்
  • ‘ககன்யான்’ குழுவிற்கு உயிர் ஆதரவு மற்றும் மருந்து வழங்கவுள்ளது பிரான்ஸ்
  • புது தில்லியில் நடைபெற்ற மத்திய இந்தி மொழி குழுவின் 31வது சந்திப்பு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நிறைவு பெற்றது.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு உலகளாவிய சுகாதார மாநாடு
  • மூன்று நாள் பாதுகாப்பு & உள்நாட்டு பாதுகாப்பு எக்ஸ்போ மற்றும் மாநாடு புது தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது.
  • கடன் மீட்பு தீர்ப்பாயயங்களில் (DRT) வழக்குகள் தாக்கல் செய்ய நாணய வரம்பு 20 லட்சமாக இரட்டிப்பு
  • இந்தியா மற்றும் அமெரிக்கா தகவல் தொடர்பு இணக்கம் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை (COMCASA)வில் கையெழுத்திடதன் மூலம் ஒரு புதிய தலைமுறை இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடங்கியது.
  • ஓரின சேர்க்கை, தண்டனைக்கு உரிய குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
  • இலங்கை கடற்படை திருகோணமலையில் நடைபெறவிருக்கும் SLINEX-2018 கூட்டு பயிற்சியில் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல்களும் விமானங்களும் இலங்கைக்கு வந்துள்ளன.

ஜல் பச்சாஓ, வீடியோ பனாஓ, புரஸ்கார் பாவோ போட்டி

1) முகமது அம்ஜத், பாட்னா 2) ஷா.சுப்ரித் தேவ் தும்கூர், கர்நாடகம் 3) ஷா.சந்தன் குமார், சம்பரன்

  • விவசாயிகளுக்கு ஒரு கூரையின் கீழ் விவசாய உபகரணங்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு வரும் சித்தி(SIDDHI) எனும் செயலியை தேஷ்தாகுளோபல், விவசாய தொழில்நுட்ப இ – வணிக நிறுவனம் வெளியிட்டது
  • சர்வதேச துப்பாக்கி சூடு விளையாட்டு கூட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுதரி தங்கமும் அர்ஜுன் சிங் சீமா வெண்கலமும் வென்றனர்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!