ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 23,24 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 23,24 2018

செப்டம்பர் 23 – சைகை மொழிகளுக்கான சர்வதேச தினம்

2018 தீம் – “With Sign Language, Everyone is Included!”

  • ஜார்க்கண்ட் ராஞ்சியில் சுகாதார உறுதி அளிப்புத் திட்டம்: ஆயுஷ்மான் பாரத் – பிரதம மக்கள் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
  • ஒடிசாவில், பிரதமர் திரு மோடி ஜர்சுகுடா விமான நிலையம் மற்றும் ஜர்சுகுடா – ராய்ப்பூர் மார்க்கத்தில் உடான் விமான சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.
  • அமிர்தசரஸின் அட்டாரி சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கரிண்டாவில் உள்ள அகில இந்திய வானொலியின் 20kW FM டிரான்ஸ்மிட்டரை மத்திய அமைச்சர் விஜய் சம்பலா திறந்துவைத்தார்.
  • பிரதமர் மோடி சிக்கிம் மாநிலத்தில் பாக்யாங் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தார். இது நாட்டின் 100-வது விமான நிலையம் ஆகும்.
  • நேபாளம் தனது புலி எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் உலகின் முதல் நாடாக வாய்ப்பு.
  • மாலத்தீவில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெற்றி பெற்றார்.
  • ஸ்பேஸ் எக்ஸ்ஸின் முதல் நிலவு விமானப் பயணியாக ஜப்பானின் மேசாவா அறிவிப்பு.
  • உலகில் முதன்முதலாக MINERVA-II1 இரண்டு ரோபோ ரோவர்ஸை வெற்றிகரமாக ஜப்பான் விண்வெளி நிறுவனம் JAXA மூலம் உடுக்கோள் ரிகுவின்  மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டன.

எளிய வாழ்க்கைக்கான குறியீடு-2018

எளிய வாழ்க்கைக்கான சிறந்த விருது

  • 1) ஆந்திரா 2) ஒடிசா 3) மத்தியப் பிரதேசம்
  • தேசிய மின்-சட்டப்பேரவை செயலி (National e-Vidhan Application – NeVA) குறித்த இரண்டுநாள் பயிலரங்கு தில்லியில் தொடங்கியது.
  • வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா. பொதுச் சபையின் 73வது அமர்வுக்கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.
  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் சிறுபான்மையின நல அமைச்சகம் முஷாயிரா – கவியரங்கத்தை நடத்துகிறது.
  • பி.எஸ்.என்.எல் – சாப்ட்வங்கி , என்.டி.டியுடன் 5 ஜி அலைவரிசைக்காக ஒப்பந்தம்.
  • இந்தியா வெற்றிகரமாக பிருத்வி பாதுகாப்பு ஏவுகணையை சோதனை செய்தது.
  • மாற்று நோபல்பரிசு என்றழைக்கப்படும் ரைட் லிவ்லிஹூட் விருது – அப்துல்லா அல் ஹமீத், முகமது ஃபாஹத் அல்-காஹ்தானி மற்றும் வலீத் அபு அல்-கைர் [சவுதி அரேபியா]
  • 2018 கௌரவ விருது – குவாத்தமாலாவின் தெல்மா ஆல்டானா மற்றும் கொலம்பியாவின் இவன் வெலாஸ்கெஸ்.

ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், ஸ்லோவாகியா

  • 86 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா வெள்ளி பதக்கம் வென்றார்.
  • நவீன் சிஹாக் 57 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
  • இந்தோனேசியாவின் ஆன்டோனி சினிசுகா கின்டிங் ஆண்கள் ஒற்றையர் சீன ஓபன் பட்டத்தை வென்றார். ஸ்பெயினின் கரோலினா மரின் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் நான்கு போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!