ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 22 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 22 2018

செப்டம்பர் 22 – உலக ரைனோ(காண்டாமிருகம்) தினம்

  • புது தில்லியில் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபைக்கான நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • அசாம் திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ ஆஸ்கார் 2019க்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர அரசு எதிர்கால தொழிலதிபர்களை கிராமப்புறங்களில் தேட ஒரு ஸ்டார்ட் அப் யாத்திரையை தொடங்கப்பட்டது.
  • ரஷ்யாவும் துருக்கியும் வடக்கு சிரியாவில் இராணுவமல்லாத மண்டல எல்லைக்கு ஒப்புதல்.
  • இந்தியா, நேபாளம் எல்லை ஆய்வுப் பணியில் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்த ஒப்புதல்.
  • ஹாங்காங் பிரதான சீனாவுடன் புதிய அதிவேக இரயில் இணைப்பைத் திறந்தது.
  • இஸ்ரோ, ககன்யான் – மனிதரைக் கொண்டு செல்லும் விண்வெளி விமான திட்டத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளப் பாதையை அமைக்கிறது.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு KYC விதிமுறைகளை செபி தளர்த்தியது.
  • காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய-IV, மாநாடு மற்றும் வொர்க்ஷாப் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் உடன் இணைந்து, ஜார்க்கண்ட் அரசு ஆயுஷ்மன் பாரத் யோஜனாவின் கீழ் மாநில மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • கத்தார் டோகாவில் ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • புது தில்லியில் 5வது டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் ஓட்டத்தின் தொடக்க நாளில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!