ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 30 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 30 2018

அக்டோபர் 30 – டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள் விழா

  • கர்நாடக தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்கு பிக் அப் மற்றும் டிராப் வசதியளிப்பை ‘Chunavana’ மொபைல் செயலி மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.
  • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேரள மாநிலத்தில் கொச்சி கப்பல் துறைமுகத்தில் நாட்டின் மிகப்பெரிய உலர் கட்டுமானத்துறைக்கான அடிக்கல் நாட்டினார்.
  • செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, உலகெங்கிலும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கெல் 2021 ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலக திட்டம்.
  • ஜப்பான் 316 பில்லியன் யென் இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடனளிக்க ஒப்புதல்.
  • பொது சுகாதார பராமரிப்பு பற்றிய 5வது தேசிய உச்சி மாநாடு அசாம், காஸிரங்காவில் தொடங்கியது.
  • புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • நீதிபதி நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் – பாம்பே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
  • நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ரூபாய் 929 கோடி மதிப்புள்ள பன்னிரெண்டு திட்டங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
  • இந்தியா, கத்தார் கூட்டுக் கமிஷனை நிறுவ முடிவு.
  • சமீபத்திய காற்று மாசுபாடு காரணமாக 15 ஆண்டு பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை தேசிய தலைநகரத்தில் இயக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அதிபன் மூன்றாவது இடம் பிடித்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!