ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 4,5 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 4,5 2018

நவம்பர் 5 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

  • அடுத்த ஆண்டு ஜனவரி மாத அளவில் ஆறு தெற்காசிய நாடுகளுடன் கவுஹாத்தியை ஆறு தென் ஆசிய நாடுகளுடன் இணைக்கத் திட்டம்.
  • புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவி மற்றும் தகவல் வசதியை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தொடங்கி வைத்தார்.
  • 3 வது தேசிய ஆயுர்வேத தினம் – 2018, ஷில்லாங் மேகாலயாவில் அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் “Ayurveda for Public Health” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்ட மாநிலமாக ஜார்கண்ட், நவம்பர் 15-ந்தேதிக்குள் உருவாகும்.
  • காமன்வெல்த் நாடுகளுக்கு பிரிட்டிஷ் ஆயுதப்படைகளில் வேலைவாய்ப்பு பெறும் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தளர்த்துவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வானில் ஒரு புன்னகை முகத்தை ஒத்திருக்கும்[ஸ்மைலி] விண்மீன் குழுக்களை கண்டறிந்தது.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் [ஆர்.ஐ.எல்]& எச்எஸ்பிசி பிளாக்செயின் வர்த்தக நிதி பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியது.

நீர் தரக் குறியீடு

  • 122 நாடுகளில் 120 வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
  • ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த இரண்டுநாள் தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் தொடங்கியது.
  • இந்திய போட்டி ஆணையம் (CCI) ஏற்பாடு செய்துள்ள பொது கொள்முதல் மற்றும் போட்டிச் சட்டம் பற்றிய தேசிய மாநாடு தில்லியில் நடைபெறுகிறது.
  • சீனாவின் ஷாங்காயில் நடைபெறும் முதலாவது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் (CIIE) இந்தியாவின் பெவிலியனை அங்கு அமைத்துள்ளது.
  • ஆப்ரேஷன் கிரீன்ஸ் – நாடு முழுவதும், அனைத்து காலங்களிலும் டி.ஒ.பி பயிர்கள் என அழைக்கப்படும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிவை விலை ஏற்ற தாழ்வின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • சுற்றுலா மற்றும் விளையாட்டு துறையில் ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் கொரியக் குடியரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்தியா மற்றும் மலாவி நாட்டுக்கு இடையே குற்றவாளிகளை இரு நாடுகளுக்கு இடையில் ஒப்படைக்கும் ஒப்பந்தம், அணுசக்தி துறையில் சமாதான நோக்கங்களுக்கான ஒத்துழைப்பு, தூதரக மற்றும் உத்தியோகபூர்வ பாஸ்போர்ட்டுகளுக்கு விசா விலக்கு ஆகிய மூன்று உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன.
  • சர்வதேச பத்திரிக்கை [பிரஸ்] நிறுவன இந்தியா விருது – நம்ரதா பிஜி அஹுஜா
  • நேபாளத்தில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் பங்களாதேஷ் பெனால்டி ஷூட் முறையில் பாகிஸ்தானை வென்றது.
  • ஜெர்மனியில் நடைபெற்ற சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுபாங்கர் டே வென்றார்.
  • ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!