நவம்பர் 25 – பெண்களுக்குஎதிரானவன்முறைஅகற்றுவதற்கானசர்வதேசதினம். 2018 தீம் – “Orange the World: #HearMeToo”
இந்தியாவின் அரசியல் சாசனம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக அரசியல் சட்ட தின விழாவை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ ஆணையத்தின் (NDMA) 14 வது துவக்க தினத்தை மத்திய மாநில உள்துறை அமைச்சர் ஸ்ரீ கிரண் ரிஜிஜு துவக்கி வைப்பார். 2018 தீம் – “Early Warning for Disasters”.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு (MWCD) அமைச்சகத்தின் ‘HAUSLA-2018’ சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களின் தேசிய குழந்தைகள் விழாவை (CCIs) செயலாளர் திரு ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, புது தில்லியில் திறந்துவைத்தார். 2018 தீம் – “Child Safety”.
பழங்குடி மொழிகளை புழக்கத்தில் வைத்திருப்பதற்காக, ஒடிசா அரசு அத்தகைய 21 மொழிகளின் லெக்சிகனை அறிமுகப்படுத்தியது.
நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலுள்ள கர்த்தார்பூரில்குருத்வாரா தர்பார் சாஹிப்பிற்கு நடைபாதை கட்ட துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அடிக்கல் நாட்ட உள்ளார்.
27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரெக்சிட் [Brexit] உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 10 வது ஆண்டு நினைவு தினத்தில், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசை அமெரிக்கா அறிவித்தது.
தைவானியர்கள் கே திருமணத்தை நிராகரித்தனர்.
ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB), தற்போது எஸ்.பி.ஐ. உடன் உள்ள கடன் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் இந்தியாவின் காற்று ஆற்றல் திட்டங்களுக்கு அதன் ஆதரவை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள பைசா இணையப்பக்கம் புதுதில்லியில் தொடங்கிவைக்கப்பட்டது.
உள்நாட்டு இனங்களின் மரபணு தேர்வு மற்றும் 6000 பால் விலங்குகளை மரபணு ரீதியாக மதிப்பீடு செய்வதற்காக இண்டஸ்சிப்[INDUSCHIP] உருவாக்கப்பட்டது.
கோல்ப் உலகக் கோப்பையில் அனிர்பன் லாஹிரி மற்றும் ககன்ஜீத் புல்லர் ஆகியோர் 10-வது இடம் பிடித்தனர்.
சையத் மோடி சர்வதேச உலக டூர் சூப்பர் 300 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா பட்டத்தைக் கைப்பற்றினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.
இந்தியா Vs ஆஸ்திரேலியா 3வது டி20யில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்தியா. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது நான்காவது மகளிர் உலக டுவென்டி 20 சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
கலை ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையின் வால்ட் பிரிவு போட்டியில் இந்திய ஜிம்னாஸ்ட் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சீனியர் காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் சி.ஏ.பவானி தேவி.