ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 22 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 22 2018

 • ஜூலை 1, 2018 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு அரியானா அரசு 6 மடங்கு அதிகமான அன்பளிப்புக் கொடுப்பனவை (DA) வழங்க முடிவு செய்துள்ளது.
 • மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது குஜராத் அரசு.
 • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மாநிலச் சட்டமன்றத்தை கலைத்தார். .
 • கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
 • மகாராஷ்டிரா அரசு, உணவு மற்றும் பால் கலப்படங்களைக் கட்டுப்படுத்த கலப்படம்-எதிர்ப்பு சட்டத்தை திருத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
 • மராத்தா இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டதாக உயர் நீதிமன்றத்திடம் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
 • கட்டுமான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான நேபாளின் மிகப்பெரிய கண்காட்சி “கான்மேக் 2018” காத்மாண்டுவின் பக்தபூரில் தொடங்கியது.
 • 10வது அக்ரோ-விஷன் கண்காட்சி, மத்திய இந்தியாவின் மிகப்பெரிய விவசாய கண்காட்சி 23 நவம்பர் முதல் 26 நவம்பர் வரை நாக்பூரில் நடைபெறும்.
 • மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையான ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மத்திய அமைச்சரவையிடம் தெரிவிப்பு.
 • இந்தியா-தஜகிஸ்தான் இடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைக்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • அடல் புதுமை திட்டம், இந்தியா மற்றும் திறமை மற்றும் வெற்றிக்கான நிதியம், ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது.
 • மொரிஷியஸ் உடன் நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் 550ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
 • அமெரிக்கா-தென் கொரியாவும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் “ஃபோல் ஈகிள்” கூட்டு இராணுவப் பயிற்சியின் அளவைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
 • வன குற்றம் கட்டுப்பாட்டு பணியகம்(WCCB), சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்திய அரசு – .நா சுற்றுச்சூழல் விருது [எல்லைகடந்த சுற்றுச்சூழல் குற்றங்கள் எதிர்ப்புக்காக]
 • பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார் அளிக்கும் இணையதள போர்டலான “ஷி பாக்ஸ்”-ஐ அறிமுகம்.
 • புது தில்லியில் நடைபெறும் பெண்கள் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் MC மேரி கோம் நுழைந்தார்.
 • ஃபிஃபா U-17 மகளிர் உலக கோப்பையில் ஜெர்மனி அமெரிக்காவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here