ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26 2019

  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை, புது தில்லியில் 33வது தொடக்க தினத்தை கொண்டாடியது. தீம் – “Celebrating Biotechnology: Building Indian as an Innovation Nation”.
  • டெல்லி அரசு 2019-20 ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) தாக்கல்.
  • இந்திய நாட்டின் சரக்கு மற்றும் சேவை நடப்பு நிதியாண்டில் 500 பில்லியன் டாலர்களை கடக்க உள்ளது.
  • பொருளாதார ஒத்துழைப்புக்கான 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் (JCEC) கூட்டம் புதுதில்லியில் தொடங்கியது.
  • ஒடிசா நாட்டின் திறன் தலைநகரமாக விரைவில் உருவாகும் சாத்தியம் உள்ளது என மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
  • சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2019ம் ஆண்டு ‘ஏவியேசன் கான்க்ளேவ்’-ஐ புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. தீம்“Flying for All”
  • தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை அமைப்பு (NDMA) வெப்ப அலை ஆபத்து குறைப்பு குறித்த இரண்டு நாள் தேசிய ஒர்க்ஷாப் ஒன்றை நடத்துகின்றது.
  • பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது (JeM) அமைப்பின் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
  • QRSAM ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

காந்தி அமைதி விருது

ஆண்டு விருது பெற்றவர்கள்
2015 விவேகானந்தா கேந்திரா, கன்னியாகுமரி
2016 ‘அட்சய பாத்திர பவுண்டேஷன்’ மற்றும் ‘சுலாப் இன்டர்நேஷனல்’ அமைப்பு
2017 ஏகல் அபியான் டிரஸ்ட்
2018 ஜப்பானை சேர்ந்த, ‘யோகி சசாகவா’ அமைப்பு
  • ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹங்கேரி வீரர் வெரோனிகா மேஜர் தங்கம் வென்றார்.
  • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் அபிஜித் குப்தா கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபியை வென்றார்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!