ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 24,25 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 24,25 2019

  • ஹரியானாவின் நிதி மந்திரி கேப்டன் அபிமன்யூ, மாநில சட்டமன்றத்தில் 2019-2020க்கு 1,32,165.99 கோடி ரூபாய் வரி இலவச பட்ஜெட்டை வழங்கினார்.
  • மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 15 நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு 46, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து விதிகளை கண்காணிக்கவும் முக்கிய இடங்களில் சிசிடிவிகளை நிறுவ கொல்கத்தா போலீஸ் முடிவு.
  • பிரதமர் நரேந்திர மோடி புது தில்லி இந்தியா கேட் அருகில் நாட்டின் தேசிய போர் நினைவுச்சின்னத்தை அர்ப்பணித்தார்.
  • புது தில்லியில் மத்திய ஆயுதக் காவல் படையின் குடியிருப்பு பகுதிகளில் 29 உள்கட்டமைப்பு திட்டங்களை உள்துறை அமைச்சர் திறந்துவைத்தார்.
  • பஞ்சாப் மாநிலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 746 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்தியாவின் ஜனாதிபதி லக்னோவில் அப்பல்லோமெடிக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.
  • வெனிசுலாவில் எந்த இராணுவத் தலையீடயும் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு வலியுறுத்தியது.
  • கியூபாவில், வாக்காளர்கள் ஒரு புதிய அரசியலமைப்பிற்கான வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர்.
  • ஜப்பானில், ஆக்கிஹிட்டோ பேரரசரின் 30 ஆண்டுகால ஆட்சியை கொண்டாட டோக்கியோவில் ஒரு விழா நடைபெற்றது.
  • ஈரானின் சபாஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
  • நகர்ப்புற ஏழைகளின் நலனுக்காக 560695 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகரம்) திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் ரைசிங் இந்தியா உச்சி மாநாடு 2019 இல் பிரதான உரையை வழங்கினார். தீம்: “Beyond Politics: Defining National Priorities”.
  • புதுடில்லியில் 4 வது உலகளாவிய டிஜிட்டல் ஹெல்த் பார்ட்னெர்ஷிப் உச்சி மாநாட்டை சுகாதார மந்திரி ஜே.பி.நடா துவக்கினார்.
  • மும்பையில் “மகளிர் தொழில் முனைவோர் 2019 நிதியளித்தல் மற்றும் பெண்களை மேம்படுத்துதல்” ஆகியவற்றிற்காக ஒரு கூட்டத்தை MSME ஏற்பாடு செய்தது.
  • மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே வைரஸ் ஹெபடைடிஸ் அகற்றுவதற்கான ஒரு தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • பிரதான் மந்த்ரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை (PM-KISAN) பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூரில் இருந்து தொடங்கினார்.
  • 2018 வீரர் விருது – மன்பிரித் சிங்
  • ரைசிங் பிளேயர் ஆஃப் தி இயர் பரிசு – மகளிர் அணியின் ஸ்ட்ரைக்கர் லால்ரேஸ்மியாமி
  • ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் புது தில்லியில் ரயில் திரிஷ்டி டாஷ்போர்டை அறிமுகப்படுத்தினார்.
  • புது தில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் நிகழ்ச்சியில் அபூர்வி சந்தீலா தங்க பதக்கம் வென்றார்.
  • மக்ரான் கோப்பை குத்துச்சண்டைபோட்டியில் மணீஷ் கௌஷிக் (60 கி), துரியோதான் சிங் நேகி (69 கி), ரோஹித் டோக்கஸ் (64 கி) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!