ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 17,18 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 17,18 2019

  • பீகாரில், ஸ்டீல் துறை மந்திரி சௌத்ரி பைரேந்தர் சிங், மேற்கு சம்பரன் மாவட்டம் பெத்தியாவில் SAIL இன் ஸ்டீல் செயலாக்க அலகு ஒன்றை திறந்து வைத்தார்.
  • மாநிலத்தின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக சமஸ்கிருதத்தை அமைக்க இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது.
  • பெண்கள் பாதுகாப்புக்காக அவசரநிலை பதில் ஆதரவு அமைப்பு (ERSS)-ஐ புதுடில்லியிலில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
  • சென்னையில் குழிகளில் இறங்கிக் கழிவுகளை அகற்றும் பண்டிகூட் என்ற ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் அறிமுகப்படுத்தியது.
  • ஏமனின் அரசாங்கம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை பின்வாங்க உடன்படிக்கை.
  • ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புகார்.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதி உதவியுடன் அமெரிக்க இராணுவ மருத்துவமனை அபுதாபியில் கட்டப்பட உள்ளது.
  • ரஷ்ய மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி சிரியாவில் சமாதான உடன்படிக்கைக்கு உதவுவதற்காக இரு நாடுகளின் ஒருங்கிணைப்பை தொடர ஒப்புக்கொண்டனர்.
  • வயநாடு சரணாலயத்தில் ஒரு புதிய சிலந்தி கண்டுபிடிப்பு.
  • புவியின் மேற்புறத்தின் கீழ் மிகப்பெரிய மலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் மீதான சுங்க வரி 200% அதிகரிப்பு.
  • இந்த மாதத்தின் முதல் பாதியில் இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5,300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

1) விராட் கோலி 2) கேன் வில்லியம்சன் 3) செதேஷ்வர் புஜாரா

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை

1) பாட் கம்மின்ஸ் 2) ககிஸோ ரபாடா

ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசை

1) ஜேசன் ஹோல்டர் 2) ஷகிப்-அல் ஹசன் 3) ரவீந்திர ஜடேஜா

  • ஹரியானா அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 4வது விவசாய தலைமை உச்சி மாநாட்டின் இறுதி விழாவில் அவர் உரையாற்றினார்.
  • இந்தியா மற்றும் அர்ஜென்டினா பாதுகாப்பு, உள்நாட்டு அணுசக்தி, சுற்றுலா, மருந்துகள் மற்றும் வேளாண்மை உட்பட பல பகுதிகளில் பத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
  • 5 நாள் ஏரோ இந்தியா கண்காட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆளில்லா விமானம் அல்லது டிரோன்ஸ், ஆளில்லா விமானம் அமைப்புகள் மற்றும் பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளன.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் அதன் பாதுகாப்பு இயக்கத்திற்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) முடிவு செய்துள்ளது.
  • வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • விதர்பா அணி ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்தி இரானி கோப்பையை வென்றது.
  • பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் சிமோனா ஹாலப்பை வீழ்த்தி பட்டத்தைப் பெற்றார்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!