ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 10,11 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 10,11 2019

  • தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (NPC) பிப்ரவரி 12ம் தேதி தனது 61வது தொடக்க தினத்தை கொண்டாடுகிறது. தீம் – “Circular Economy for Productivity & Sustainability”.
  • இமாச்சல பிரதேச முதல்வர் 2019-20 நிதியாண்டுக்கான 44,000 கோடி ரூபாய் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார்.
  • க்ரீமிகா மெகா உணவு பூங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் திறந்து வைத்தார்.
  • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் மேம்பட்ட வைராலாஜி நிறுவனத்தை (IAV) திறந்துவைத்தார்.
  • ஒடிசா மாநில உணவு ஆணையம் மீண்டும் வன உரிமை சட்டம், 2006ஐ விரைவாக மாநில அரசை செயல்படுத்த கேட்டுக்கொண்டது.
  • 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக செனட்டர் ஆமி குளோபுச்சார் போட்டி.
  • மொபைல் ராக்கெட் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் வாங்க போலந்து முடிவு.
  • ஐஐடி மெட்ராஸ் கண் புற்றுநோயின் தனிப்பட்ட பாதையை அடையாளம் கண்டுள்ளது.

ஐசிசி டி20 தரவரிசை

  • பந்துவீச்சாளர் – 2) குல்தீப் யாதவ்
  • அணி – 1) பாகிஸ்தான் 2) இந்தியா
  • உத்திரப்பிரதேச மாநிலம் க்ரேட்டர் நொய்டாவில் 2019-ம் ஆண்டிற்கான பெட்ரோடெக் 13வது நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • “விவசாயிகளின் காலநிலை ஆபத்துக்களை நிர்வகிப்பதற்கான வேளாண் வானிலை முன்னேற்றங்கள்” பற்றிய சர்வதேச கருத்தரங்கம் புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • பொது சுகாதாரத்திற்கான யுனானி மருத்துவம் பற்றிய இரண்டு நாள் மாநாடு புதுதில்லியில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தால் (CCRUM) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மாநாடான தூய்மை சக்தி 2019 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2019-ம் ஆண்டுக்கான தூய்மை விருதுகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
  • மத்திய அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் கிரேட்டர் நொய்டாவில் ஓபன் ஏக்கர் உரிமக் கொள்கை (OALP)யின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தை தொடங்கி வைத்தார்.
  • சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் கடந்த ஆண்டு ‘பசுமை நன்மை பத்திர’ பிரச்சாரம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதற்கும் நோக்கமகாகக் கொண்டது.
  • 8 மாநிலங்களில் 14 கடற்கரை பொருளாதார மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநிலங்களுக்கான அமைச்சர் தெரிவித்தார்.
  • சாகர்மாலா திட்டத்தின் கீழ் “கேரள மாநிலத்தில், கடற்கரை பொருளாதார மண்டலம்-மலபார்” அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • GHTC- இந்தியாவின் கீழ் லைட்ஹவுஸ் திட்டங்களை நிர்மாணிக்க நாடெங்கிலும் ஆறு தளங்களைத் தேர்ந்தெடுக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அலுவல்கள் அமைச்சகம் ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
  • அரசு “கலைஞர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் ஓய்வூதியத் திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • எகிப்தின் ஜனாதிபதி எல்-சிஸி – ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர்
  • இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் மங்கோலியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ராஜஸ்தானில், இந்திய இராணுவத்தின் இரண்டு நாள் கூட்டு பேரிடர் மீட்பு மேலாண்மை மற்றும் உதவும் “ராகத் இராணுவப் பயிற்சி” நடைபெற்றது.
  • டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் கோரன்டின் மௌட்டெட் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹாரிஸை வீழ்த்தி சென்னை ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • டென்னிஸ்: பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் டாப் 100க்குள் நுழைந்தார்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!