ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 01 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 01 2019

  • குஜராத் அரசு61 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி(டிஏ)வை 2 சதவிகிதம் உயர்த்தியது.
  • கானா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் விதித்தது.
  • ஈரானிய புரட்சியின் 40 வது ஆண்டு விழா கொண்டாட்டம்.
  • மத்திய ஆபிரிக்க குடியரசு (CAR) மீது மேலும் ஒரு ஆண்டு தடை விதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  • தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை பாராளுமன்றத்தில் தீர்மானம்.
  • ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை ஈரானுடன் INSTEX எனப்படும் ஒப்பந்த சேனலை நிறுவியுள்ளன.
  • இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்தது.
  • நிதி அமைச்சர் பியுஷ் கோயல் பாராளுமன்றத்தில் 2019-20க்கான இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார்.

2019-20 இடைக்கால நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்

  • பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்க உத்தரவாதம்.
  • ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு.
  • 2019-20ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
  • வங்கி / அஞ்சலக முதலீடுகள் மூலம் வட்டியாக பெறப்படும் தொகைக்கு வரிச்சலுகை பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.10,000-லிருந்து ரூ.40,000-ஆக அங்கீகரிக்கப்படும்.
  • பசுமாடுகளின் நீடித்த இனவிருத்தி மேம்பாட்டிற்காக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
  • 5 கோடி மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துக்கென தனித்துறை உருவாக்கப்படும்.
  • 22ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படும்.
  • 2019-20-க்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீத்த்தில்4%ஆக இருக்கும். 3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்கு 2020-21-ல் எட்டப்படும்.
  • மின்சார வசதியை பெற விரும்பும் அனைத்து வீடுகளுக்கும் 2019 மார்ச்சுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
  • பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் கிராமப்புற சாலைகளின் அளவு மும்மடங்காக அதிகரிப்பு.
  • 2018-19 நிதி ஒதுக்கீட்டில் 21% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.58,166 கோடியாக நிர்ணயம்.
  • அருணாச்சலப்பிரதேச மாநிலம் அண்மையில் விமான போக்குவரத்து வசதியை பெற்றுள்ளது.
  • பிரம்மபுத்திரா ஆற்றில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி சரக்குப்போக்குவரத்து தொடங்கப்படும்.
  • முதன் முறையாக ராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,00,000 கோடியை தாண்டியுள்ளது.
  • இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றைச் சாளர அனுமதியைப் பெறவும், படப்பிடிப்பை எளிதாக்கவும் நடவடிக்கை.
  • நாட்டில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்.
  • செயற்கைப் புலனாய்வுக்கான தேசிய திட்டத்திற்கு உறுதுணையாக செயற்கைப் புலனாய்வு நுழைவாயில் ஒன்று புதிதாக ஏற்படுத்தப்படும்.
  • பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.
  • குப்தேஷ்வர் பாண்டே – பீகாரின் புதிய தலைமை காவல் இயக்குனர் (டிஜிபி)
  • சிறு மற்றும் குறு விவசாயிகள் வருமான ஆதரவை வழங்க பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  • 6 நீர்மூழ்கிக் கப்பல்களின் உள்நாட்டு கட்டமைப்புக்கு பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்.
  • இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் கிரிக்கெட் வீரர் எனும் சாதனை படைத்தார்.
PDF Download
2019 ஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!