ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 06 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 06 2018

டிசம்பர் 6 – டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் 63-வது நினைவு தினம்

  • கொல்கத்தா-பாட்னா இடையே உள்நாட்டு நீர்வழியில் செல்லும் இந்தியாவின் இரண்டாவது கொள்கலன் சரக்குக்கப்பல் பாதை அறிமுகம்.
  • மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங், புதுடில்லியில் உள்ள ஐ.சி.ஏ.ஆரின் வேளாண் தொழில்நுட்ப தகவல் மையத்தில் (ஏ.சி.ஐ.சி.) பூசா கிசான் ஹாட்-ற்கான அடிக்கல் நாட்டினார்.
  • தலித் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஊடக அதிகாரமளிப்பதற்கான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை திரு.தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.
  • தென் கொரியா மற்றும் வட கொரியா (DPRK) தங்கள் எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு இடுகைகளை திரும்பப்பெற ஒப்புதல்.
  • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஒவ்வொரு காலாண்டிலும் 0.25 சதவிகிதம் கட்டாய பணவைப்பு விகிதம் என்ற ஸ்டேச்சுடரி லிக்விடிட்டி விகிதத்தை குறைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • எம்எஸ்எம்இ-க்காக கடன் தரும் மிதப்பு விகிதத்திற்கு புதிய முறையை ரிசர்வ் வங்கி முன்மொழிகிறது.
  • டிசம்பர் 07, 2018 அன்று கோவாவில் வருடாந்திர ஸ்டார்ட் அப் இந்திய துணிகர மூலதன உச்சி மாநாடு நடைபெறுகிறது.
  • உச்சி மாநாட்டின் தீம் ‘Mobilizing Global Capital for Innovation in India.’
  • பிரீத்தி சரன் – பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான .நாவின் குழுவில் ஆசியா பசிபிக் ஆசனம் (CESCR).
  • கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கேரளாவுக்கு 3048 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.
  • அஞ்சல் துறை, சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு துறை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துறையில் இந்தியா – ஜப்பான் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • புவி அறிவியல் துறையில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • இந்தியா – பிரான்ஸ் இடையே எரிசக்தி பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • மனிதர்களைக் கொண்ட விண்வெளிப்பயணத் திட்டத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா,கூட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • அமைதிக்காக விண்வெளி ஆய்வு மற்றும் கண்டறிதல்களைப் பயன்படுத்துவதற்காக இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • புவியியல், சுரங்கம் மற்றும் தாது வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்துவதற்கு இந்தியா-மொராக்கோ இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • விண்வெளி அறிவியல், தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள் துறையில் இந்தியாஅல்ஜீரியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.
  • வேளாண் ஏற்றுமதிக்கொள்கை 2018-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தியா-சீனாவுக்கு இடையே 2018 ஆம் ஆண்டிற்கான ஹேண்ட்-இன்-ஹேண்ட் கூட்டு பயிற்சி சீனாவின் செங்டு வில் நடத்தப்படும்.
  • இந்திய கடலோர காவல்படை போர்ட் பிளேயரில் கடலில் ‘க்ளீன் சீ [சுத்தமான கடல்] – 2018‘ என்ற தலைப்பில் பிராந்திய நிலை கடல் எண்ணெய் மாசுபாடு பதில் பயிற்சியை நடத்தியது.
  • குடியரசின் நெறிமுறை”, மற்றும் “லோக்தந்த்ர கி ஸ்வார்” (குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் தெரிவு செய்யப்பட்ட உரைகள்) எனும் புத்தகங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வெளியிடுவார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!