ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 16,17 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 16,17 2018

டிசம்பர் 16 – விஜய் திவாஸ்

  • சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் வதோதராவில் நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தூத்துக்குடியில் திறக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
  • நாஜி ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், தப்பிப்பிழைத்த யூதர்களுக்கு, ஜெர்மனி ஒரு முறை பணம் செலுத்த ஒப்புதல்.
  • ஆந்திரா கடற்கரைப் பகுதியை தாக்கவுள்ளது ‘பெத்தாய்’ புயல்.
  • ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாடு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை இறுதிப்படுத்துகிறது.
  • முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மக்களவையில் திருநங்கை மசோதா(உரிமைகள் பாதுகாப்பு) நிறைவேற்றப்பட்டது.
  • ​​மரித்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக புதுடெல்லியில் ஒரு சிறப்பு மராத்தான் ‘சோல்ஜரதான்’யை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
  • மிஸ் யுனிவர்ஸ் 2018 – பிலிப்பைன்ஸின் கேட்ரியானா கிரே
  • ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது பெல்ஜியம் அணி.
  • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 25 டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வேகமான வீரர் எனும் சாதனை படைத்தார்
  • சீனாவில் நடைபெறும் உலக பேட்மிண்டன் டூர் ஃபைனல்ஸ் கோப்பையை பி.வி.சிந்து வென்றார்.
  • 37வது சீனியர் தேசிய படகுப்போட்டி (ரோவிங்) சாம்பியன்ஷிப் புனேயில் இராணுவ படகோட்டும் முனையத்தில் துவங்கவுள்ளது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!