நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –22 & 23, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –22 & 23, 2019

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 22 – உலக காண்டாமிருக தினம்
  • உலக காண்டாமிருக தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்படுகிறது. உலக காண்டாமிருக தினத்தை முதன்முதலில் WWF- தென்னாப்பிரிக்கா 2010 இல் அறிவித்தது.
  • இது உலகெங்கிலும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள், காண்டாமிருக சரணாலயங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குடிமக்களை ஒன்றிணைத்து ஐந்து வகையான காண்டாமிருகங்களுக்கு விழிப்புணர்வையும் நிதியையும் திரட்டுகிறது – இவை அனைத்தும் சட்டவிரோத காண்டாமிருக கொம்பு வர்த்தகத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்களாகும்.

செப்டம்பர் 23 – சர்வதேச சைகை மொழிகள் தினம்

  • 19 டிசம்பர் 2017 அன்று, ஐ.நா பொதுச் சபை செப்டம்பர் 23 ஐ சர்வதேச சைகை மொழிகளின் தினமாக (ஐ.டி.எஸ்.எல்) அறிவித்தது .உலக காது கேளாதோர் கூட்டமைப்பு (WDF) 1951 செப்டம்பர் 23 இல் நிறுவப்பட்டது, அதை நினைவுகூற இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2019 தீம்: Sign Language Rights for All!

தேசிய செய்திகள்

நாட் கிரிட் 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தயாராக இருக்கும்
  • குடியேற்றம், வங்கி, தனிநபர் வரி செலுத்துவோர், விமானம் மற்றும் ரயில் பயணங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நாட் கிரிட் 2020 ஜனவரியில் இருந்து செயல்பட வாய்ப்புள்ளது.
  • புலனாய்வு உள்ளீடுகளை உருவாக்க NATGRID அனைத்து குடியேற்ற நுழைவு மற்றும் வெளியேறுதல், வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு கொள்முதல், தொலைத்தொடர்பு, தனிநபர் வரி செலுத்துவோர், விமான பயணிகள், ரயில் பயணிகள் தொடர்பான தகவல்களை கொண்டிருக்கும்.
சிலாஹதி – எல்லை ரயில் இணைப்பு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன
  • பங்களாதேஷின் ரயில்வே அமைச்சர், எம்.டி.நூருல் இஸ்லாம் சுஜன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ரிவா கங்குலி தாஸ் பங்களாதேஷின் சிலாஹதியில் இருந்து இந்தியாவின் எல்லையில் உள்ள ஹல்திபரி அருகே மேம்பாட்டு மற்றும் காணாமல் போன தடங்களை செப்பனிடுவதற்கான பணிகளுக்கு, சிலாஹதியில் அடிக்கல் நாட்டினர்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொல்கத்தாவிலிருந்து சிலிகுரி வரையிலான பிரதான பாதையின் ஒரு பகுதியாக ஹல்திபரி- சிலாஹதி ரயில் பாதை இருந்தது. 1965 முதல் பங்களாதேஷில் இருந்து டார்ஜிலிங் வரை சிலிகுரி வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன, இது 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு நிறுத்தப்பட்டது .
பேரழிவு தேவைகள் மதிப்பீடு குறித்த தேசிய ஒர்க்ஷாப்
  • தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் புதுடில்லியில் பிந்தைய பேரிடர் தேவைகள் மதிப்பீடு குறித்த ஒரு நாள் தேசிய ஒர்க்ஷாப் ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறது.
  • இந்த ஒர்க்ஷாப்பின் நோக்கம் , ஆய்வின் முடிவு ஆவணங்களை சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுப்பவதாகும், இதனால் இவை குறிப்பு ஆவணமாக பயன்படுத்தப்படலாம், அதே நேரத்தில் பேரழிவுக்கு பிந்தைய கட்டத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிப்பதற்கான குறிப்புகளை தயாரிக்க பயன்படலாம் .
கார்கில் டு கோஹிமா (கே 2 கே) அல்ட்ரா மராத்தான் – “குளோரி  ரன்
  • கார்கில் போரின் நினைவாக, ஏர் வைஸ் மார்ஷல் பி.எம். சின்ஹா கார்கில் டு கோஹிமா (கே 2 கே) – “குளோரி ரன்” என்ற அல்ட்ரா மராத்தானை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
  • கார்கில் வெற்றியின் 20 வது ஆண்டை நினைவுகூருவதற்கும், IAF இன் உண்மையான பாரம்பரியம் மற்றும் குறிக்கோளுக்கு ஏற்ப வாழ்வதற்கும், குளோரி ரன்” என்ற அல்ட்ரா மராத்தானை ஐஏஎஃப் மேற்கொள்கிறது
  • இந்த மாரத்தான் கார்கில் போர் நினைவு டிராஸ் ஜம்மு & காஷ்மீரிலிருந்து கோஹிமா (நாகாலாந்து) வரை நடைபெறவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேட்ஸ் அறக்கட்டளையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது
  • மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (பி.எம்.ஜி.எஃப்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
  • நிறுவனங்கள், நகராட்சிகள் மற்றும் நகர பஞ்சாயத்துகளில் உள்ள கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு இந்த அறக்கட்டளை ஆதரவளிக்கும்.

விருதுகள்

தேசிய நீர் மிஷன் (NWM) விருதுகள் 2019
  • தெலுங்கானாவில் நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் மற்றும் கிராம நீர் வழங்கல் (மிஷன் பாகீரதா)  ஆகிய துறைகள் தேசிய நீர் மிஷன் விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த விருது  தேசிய நீர் மிஷனின் ஐந்து இலக்குகளின் கீழ் வரையறுக்கப்பட்ட 10 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
  • இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 25 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது, மத்திய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் மத்திய மாநில ஜல் சக்தி அமைச்சர் ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர் .
71 வது பிரைம் டைம் எம்மி விருதுகள்
  • 71 வது பிரைம் டைம் எம்மி விருதுகள் தொடங்கப்பட்டுள்ளன. HBO இன் கேம் ஆப் த்ரோன்ஸ், 32 பரிந்துரைகளுடன் சிறந்த நாடகத் தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • நாடகத் தொடரில் சிறந்த முன்னணி நடிகருக்கான விருது பில்லி போர்ட்டர்க்கு வழங்கப்பட்டுள்ளது , நாடகத் தொடரின் சிறந்த இயக்குருக்கான விருதை ஜேசன் பேட்மேன் பெற்றார் , நாடகத் தொடரில் சிறந்த முன்னணி நடிகைக்கான விருது  ஈவ் கில்லிங்கிற்கான ஜோடி கமருக்கு வழங்கப்பட்டது , சிறந்த நகைச்சுவைத் தொடர்: பிளேபாக், சிறந்த நாடகத் தொடர்: கேம் ஆப் த்ரோன்ஸ்.

விளையாட்டு செய்திகள்

ராகுல் அவேர் வெண்கலம் வென்றார்
  • கஜகஸ்தானின் நூர்-சுல்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் ராகுல் அவேர் ஆண்கள் 61 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பின் இந்த பதிப்பில் மொத்தம் 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்களுடன் இந்தியாவின் ஐந்தாவது பதக்கம் இதுவாகும்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அமித் பங்கல்  வெள்ளி பதக்கம் வென்றார்
  • ரஷ்யாவின் எகடெரின்பர்க்கில் நடந்த ஏஐபிஏ ஆண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஏஸ் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் வெள்ளி பதக்கம் வென்றார். ஃப்ளைவெயிட் (48-52 கிலோ) பிரிவில் உஸ்பெகிஸ்தான் ஷாகோபிடின் சோயிரோ அமித் பங்களை தோற்கடித்தார்
விளையாட்டு வீரர்களுக்கு 20 தேசிய சிறந்த மையங்களை உருவாக்க விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது 
  • 2024 மற்றும் 2028 ஒலிம்பிக்கிற்கு விளையாட்டு வீரர்களை தயார் செய்வதற்காக  விளையாட்டு அமைச்சகம் 20 சிறந்த தேசிய மையங்களை உருவாக்க உள்ளது . ஒவ்வொரு சிறப்பான மையமும் நான்கு முதல் ஆறு குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு நிதி வழங்கும்.
சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் 2019
  • செபாஸ்டியன் வெட்டல் சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸை வென்றார், லூயிஸ் ஹாமில்டன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டோரே பான் பசிபிக் இறுதிப் போட்டி
  • ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு நவோமி ஒசாகா, டோரே பான் பசிபிக் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசெங்கோவாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!