நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019

 தேசிய செய்திகள்

தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம் பெங்களூரில் திறக்கப்பட்டது
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்.
  • இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம், தூய்மையான நிலக்கரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை (என்.சி.சி.சி.ஆர் & டி) அமைத்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஸ்டீல் இறக்குமதி கண்காணிப்பு முறையைத் தொடங்கினார்
  • வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் மாநில அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இணைந்து ஸ்டீல் இறக்குமதி கண்காணிப்பு முறையை (சிம்ஸ்) புது தில்லியில்  தொடங்கினர்.
  • இந்த அமைப்பு அமெரிக்க ஸ்டீல் இறக்குமதி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு (சிமா) அமைப்பின் முறையில் ஸ்டீல் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து  உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஸ்டீல் இறக்குமதி குறித்த முன்கூட்டிய தகவல்களை சிம்ஸ் அரசு மற்றும் பங்குதாரர்களுக்கு, ஸ்டீல் தொழில் (உற்பத்தியாளர்கள்), ஸ்டீல் நுகர்வோர் (இறக்குமதியாளர்கள்) ஆகியோருக்கு வழங்கும்.

தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பாதுகாப்பு பட்டறையில் தமிழக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்
  • நெடுஞ்சாலை பாதுகாப்பைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்காகவும், சிறந்த நடைமுறைகளை இங்கு நடைமுறைப் படுத்துவதற்காகவும் தமிழக அரசு மூத்த அதிகாரத்துவக் குழுவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய ஆறு நாள் பட்டறையில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவின் விக்ரோட்ஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் மாநில அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் நடைபெறவுள்ளது.

சர்வதேச செய்திகள்

ஹம்பர்டோ சூறாவளி
  • ஹம்பர்ட்டோ சூறாவளி இந்த வார இறுதியில் பெர்முடாவை அதிக காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கும் என்று யு.எஸ். தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது,   ஹம்பர்டோ  சூறாவளி  செப்டம்பர் 16 அன்று பெர்முடாவிலிருந்து மேற்கே 670 மைல் தொலைவில் நிலைகொண்டிருந்தது .

செயலி & இனைய போர்டல்

தோற்றத்திற்கான சான்றிதழ்களை மின்னணு முறையில் வழங்குவதற்கான பொதுவான டிஜிட்டல் தளம்
  • வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் மாநில அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் புது தில்லியில் மின்னணு சான்றிதழ்கள் வழங்குவதற்கான பொதுவான டிஜிட்டல் தளத்தை தொடங்கினர்.
  • பங்குதாரர் நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டால், காகித வடிவில் இல்லாத சான்றிதழ்கள், மின்னணு முறையில் வழங்கப்படும்.

மாநாடுகள்

இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் பதினாறாவது சுற்று
  • இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வெளியுறவு அலுவலக ஆலோசனைகளின் பதினாறாவது சுற்று ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றது.
  • இருதரப்பு ஒத்துழைப்பு, தற்போதைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், ஷாஹித் பெஹஸ்தி மற்றும் சபாஹர் துறைமுகத்தின் மேம்பாடு, மற்றும் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான சபாஹர் ஒப்பந்தத்தை பற்றி ஆலசோனை யாவையும் கூட்டத்தில் பரிமாறி கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியா, ஸ்லோவேனியா பல்வேறு துறைகளில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன
  • பன்முகத்தன்மையை வலுப்படுத்தவும் மற்றும் மல்டிபோலரிட்டியை மேம்படுத்தவும் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் ஸ்லோவேனிய ஜனாதிபதி  போருட் பஹோர் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • இந்தியாவும் ஸ்லோவேனியாவும் முதலீடு, விளையாட்டு, கலாச்சாரம், நதி புத்துணர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

திட்டங்கள்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் (லீப்)- 2019 மற்றும் (ஆர்பிட்) – 2019 ஐ அறிமுகப்படுத்துகிறார்
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, பண்டிட் மதன் மோகன் மால்வியா தேசிய மிஷன் ஆஃப் டீச்சர்ஸ் அண்ட் டீச்சிங் (பி.எம்.எம்.எம்.என்.எம்.டி) இன் கீழ் கல்வியாளர்களுக்கான தலைமைத்துவ திட்டம் (லீப்) – 2019 மற்றும் கற்பித்தல் தொடர்பான வருடாந்திர புதுப்பித்தல் திட்டம் (ஆர்பிட்) – 2019 ஐ புதுடில்லியில் அறிமுகப்படுத்தினார்.
  • ஆசிரியர்கள் தங்கள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவர்களின் கற்பித்தல் திறனை வளர்ப்பதற்கும் ஆர்பிட் ஒரு சிறந்த தளமாகும்.
  • உயர்கல்வி நிறுவனங்களுக்கான தலைமைத்துவ வளர்ச்சியின் கட்டமைக்கப்பட்ட திட்டத்தை வடிவமைத்து வழங்குவதற்காக “கல்வியாளர்களுக்கான தலைமைத்துவ திட்டம் (லீப்)” தொடங்கப்பட்டது.
ஏற்றுமதி கடன் காப்பீட்டு திட்டம் (என்.ஆர்.ஐ.வி.கே)
  • ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம் மூலம் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் என்.ஆர்.ஐ.வி.கேNIRVIK என்ற புதிய ஏற்றுமதி கடன் காப்பீட்டு திட்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புதுடில்லியில் 2019 செப்டம்பர் 14 ஆம் தேதி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பாதுகாப்பு செய்திகள்

வார் கேமிங்  மென்பொருள் இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது
  • முதன்மையான டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசிஸ் (ஐ.எஸ்.எஸ்.ஏ) டெல்லி,இந்திய கடற்படைக்கான சமகால செயல்பாட்டு மற்றும் போர்க்கப்பல் தேவையை பூர்த்தி செய்வதற்காக விசாகப்பட்டினத்தின் கடல்சார் போர் மையத்துடன் இணைந்து புதிய வார் கேமிங் மென்பொருளை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
  • கடல்சார் போர் மையங்ளில் சமீபத்திய தொழில்நுட்ப மற்றும் கணினி கருவிகளைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்கும் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
முத்தரப்பு கடற்படை பயிற்சி
  • சிங்கப்பூர் கடற்படை (ஆர்.எஸ்.என்), ராயல் தாய்லாந்து கடற்படை (ஆர்.டி.என்) மற்றும் இந்திய கடற்படை (ஐ.என்) சேர்ந்து செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 19 வரை ஒரு  முத்தரப்பு  பயிற்சியை போர்ட் பிளேரில் மேற்கொள்ளவுள்ளது  .
  • இந்த ஐந்து நாள் பயிற்சி சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் இந்தியா இடையேயான கடல்சார் உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் ஒட்டுமொத்த கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும்  வழங்குகிறது.

விருதுகள்

டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்பு  விருதை பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா பெற்றார்
  • பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்பு விருது 2019 டாக்காவில் வழங்கப்பட்டது. முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின்  நினைவாக இந்த விருது வழங்கபடுகிறது.
  • பதற்றம், மோதல்கள் மற்றும் பயங்கரவாதம் இல்லாத அமைதியான மற்றும் வளமான தெற்காசியாவைப் பற்றிய பிரதமர் ஹசீனாவின் நோக்கத்திற்கு மேலும் இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் அவர் செய்த பங்களிப்பிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
நேச்சுரல்ஸ் ஹோம்ப்ரெனர்  விருதுகள் 2019
  • நேச்சுரல்ஸ் ஹோம்ப்ரெனர் விருதுகள் 2019 இல் பதினான்கு பெண் தொழில்முனைவோர், விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட 12 வெவ்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்த பெண்கள் தங்கள் வணிக யோசனையின் தனித்துவம், சவால்கள், அளவிடுதல், முன்னேற்றம் மற்றும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

விளையாட்டு செய்திகள்

12 வது சர்தார் சஜ்ஜன் சிங் சேத்தி மாஸ்டர்ஸ் ஷாட்கன் சாம்பியன்ஷிப் போட்டி
  • போபாலில் சமீபத்தில் முடிவடைந்த 12 வது சர்தார் சஜ்ஜன் சிங் சேத்தி மாஸ்டர்ஸ் ஷாட்கன் சாம்பியன்ஷிப்பில் பிருத்விராஜ் தொண்டைமன் 48-43 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியனும், ஆறு முறை ஆசிய சாம்பியனுமான மானவ்ஜித் சிங் சந்துவை தோற்கடித்தார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!