நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –14, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –14, 2019

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 14 – உலக முதலுதவி தினம் 2019
  • உலக முதலுதவி தினம் என்பது செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு செப்டம்பர் 14,2019 அன்று கொண்டாடப்படுகிறது, இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பால் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தீம்: “முதலுதவி மற்றும் விலக்கப்பட்ட மக்கள்”.

தேசிய செய்திகள்

இந்தி திவாஸ்
  • இந்தி திவாஸ் செப்டம்பர் 14 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று  தேவநாகரியில் எழுதப்பட்ட இந்தியை அரசியலமைப்பு சபை நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.
இந்தியாவில் கடல்சார் தொடர்பு சேவைகள்
  • “கடல்சார் தகவல் தொடர்பு சேவைகளை” மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத்  மும்பையில் தொடங்கினார்.
  • செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் கப்பல்களில் பயணம் செய்யும் போது , இணையதளம் மற்றும் வீடியோ  சேவைகளை கடலில் உள்ளவர்களுக்கு கடல்சார் இணைப்பு வழங்கும் என்று அவர் கூறினார்.
பழங்குடியின நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய பழங்குடி இயக்கம் தொடங்கப்பட்டது
  • மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா நாட்டில் பழங்குடியின நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய பழங்குடி இயக்கத்தை தொடங்கினார்.
  • கிரேட்டர் நொய்டா எக்ஸ்போவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சிஓபி 14 யுஎன்சிடிடி: ட்ரிஃபெட்-GIZ’ நிகழ்ச்சியின் “பாம்பூனமிக்ஸ் மூலம் இந்திய பார்வை” அமர்வில் பாலைவனமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான இயக்கத்தை அவர் தொடங்கினார்.
நாடு முழுவதும் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது
  • மத்திய அரசு நாடு முழுவதும் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் நான்காயிரம் இந்த ஆண்டில் அமைக்கப்படும்.
  • புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் யுனானி மருத்துவ மையம் மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவைத் திறந்து வைத்த பின்னர் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச செய்திகள்

இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் 600 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது
  • பங்களாதேஷ் அரசு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கிடைக்க, மின்சாரம் இறக்குமதி செய்வதற்கும் மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்கும் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் 600 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது, மேலும் பூட்டான் மற்றும் நேபாளத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

வணிக செய்திகள்

உள்நாட்டு விலைகளை சரிபார்க்க வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு விதித்தது
  • வெங்காயத்தின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு விலைகளைக் குறைக்கவும் அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசாங்கம் ஒரு டன்னுக்கு 850 அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டது.
  • குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது விகிதமாகும், அதற்குக் கீழே எந்த ஏற்றுமதியும் அனுமதிக்கப்படாது.
உலக வங்கி உணவு பூங்காக்களுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளது
  • நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய  உணவு பூங்காக்களுக்கு உலக வங்கி மூவாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளது  என்று மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

மாநாடுகள்

15 வது இந்தோ-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாடு
  • 15 வது இந்தோ-அமெரிக்க பொருளாதார உச்சி மாநாட்டை , இந்தோ-அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ்- வட இந்தியா கவுன்சில் (ஐஏசிசி- என்ஐசி) புதுடில்லியில் ஏற்பாடு செய்தது.
  • உணவு பதப்படுத்தும் துறையை உயர்த்துவதற்காக உணவு பதப்படுத்தும் அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தற்போதைய ரூ .1,400 கோடியிலிருந்து ஆண்டுக்கு ரூ .3,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பசுமை முயற்சிகள் குறித்து ரயில்வே சி.ஐ.ஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
  • பசுமை முயற்சிகளை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே, புதுதில்லியில் உள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • ரயில்வேக்குரியவைகளை பசுமையாக்குவது மற்றும் உற்பத்தி வசதிகள் மற்றும் ரயில்வே ஒர்க்ஷாப்களில் ஆற்றல் திறனை மேம்படுத்துவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

விருதுகள்

ஐந்து இந்திய பெண் போலீஸ் அதிகாரிகள் ஐக்கிய நாடுகளால் கவுரவிக்கப்பட்டனர்
  • ஐந்து இந்திய பெண் போலீஸ் அதிகாரிகள் தெற்கு சூடானில் ஐ.நா. பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர்.
  • சண்டிகர் காவல்துறை ஆய்வாளர் ரனா யாதவ்; மகாராஷ்டிரா காவல்துறை டிஎஸ்பி கோபிகா ஜாகிர்தார், உள்துறை அமைச்சகத்தின் டிஎஸ்பி பாரதி சமந்திரே, உள்துறை அமைச்சகத்தின் ஆய்வாளர் ராகினி குமாரி, ராஜஸ்தான் காவல்துறை ஏஎஸ்பி கமல் சேகாவத் ஆகியோருக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக  ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்
  • 18 வீராங்கனைகளை கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், இந்த அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது . இந்த தொடர் இங்கிலாந்தின் மார்லோவில் இந்த மாதம் 27 முதல் அடுத்த மாதம் 4 வரை நடைபெற உள்ளது. கோல்கீப்பர் சவிதா புனியா துணை கேப்டனாக  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை
  • ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை அடுத்த ஆண்டு நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியா நடத்தவுள்ளது.
  • போட்டியை இந்தியா நடத்தும் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 2018 இல் நடந்த போட்டியின் பட்டத்தை வென்றதன் மூலம்  ஸ்பெயின் நடப்பு சாம்பியன்களாக உள்ளது.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!