நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 01 & 02, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 01 & 02, 2019

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 1 – உலக கடித தினம்
 • உலக கடித தினம் செப்டம்பர் 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
 • உலக கடித தினம் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் கையால் எழுதப்பட்ட கடிதம் அவரது அஞ்சல் பெட்டியில் வரும்போது அவர் உணர்ந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை நினைவுகூற உருவாக்கப்பட்டது.
செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம்
 • உற்பத்தி மற்றும் தயாரிப்பு பல்வகைப்படுத்தலில் கவனம் செலுத்தி தேங்காய் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக உலக தேங்காய் தினம் (WCD) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 • ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் (ஏபிசிசி) உருவான தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 • 2019 ஆம் ஆண்டின் தீம் “குடும்ப நலனுக்கான தேங்காய்”.

தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் ‘ராஷ்டிரிய போஷன் மா’ என்று கொண்டாடப்பட உள்ளது
 • செப்டம்பர் மாதம் முழுவதும் “ராஷ்டிரிய போஷன் மா” என்று கொண்டாடப்படும்.
 • இந்த ஆண்டின் கருப்பொருள் காம்ப்ளெமென்டரி பீடிங்.
 • முழுமையான ஊட்டச்சத்துக்கான பிரதமரின் திட்டமான – போஷான் அபியான் என்பது 2022 ஆம் ஆண்டளவில் இலக்கு அணுகுமுறையுடன் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான தொலைநோக்குடன் கூடிய ஒருங்கிணைப்பு பணி ஆகும்.
சிஜிஹெச்எஸ் சேவைகள் 2022 க்குள் 100 நகரங்களில் கிடைக்கப்பெறவுள்ளது
 • 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களாக இருக்கும் சிஜிஹெச்எஸ் மத்திய அரசு சுகாதார மையங்களின் பயனாளிகளுக்கான வருடாந்திர சுகாதார பரிசோதனைக்கான புதிய திட்டத்தை சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.மேலும் அவர் புதுடில்லியில் அதிநவீன சிஜிஎச்எஸ் பவனையும் திறந்து வைத்தார்.
 • டாக்டர் ஹர்ஷ் வர்தன் 2022 க்குள் 100 நகரங்களில் சிஜிஹெச்எஸ் சேவைகள் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.
தேர்தல் ஆணையர்கள் சரிபார்ப்பு திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது
 • தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் புதிய மெகா வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டத்தை (ஈவிபி) அறிமுகப்படுத்தியுள்ளது .
 • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு வாக்காளர் தங்களுக்கென பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பெறுவார்கள் , இது அவர்களின் தேர்தல் பதிவு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும் மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களைக் குறிக்கவும் அனுமதிக்கும்.
நாட்டின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கம்
 • துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, செர்லோபள்ளி மற்றும் ரபுரு இடையே நாட்டின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதையையும், வெங்கடச்சலம் மற்றும் ஒபுலவரிபள்ளி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் ஆந்திரா மாநிலத்திற்கு அர்ப்பணித்துள்ளார். ரயில் சுரங்கப்பாதையின் நீளம் சுமார் 6.6 கிலோமீட்டர் ஆகும்.
ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் 20 வது ரைசிங் தினத்தை கொண்டாடுகிறது
 • செப்டம்பர் 1 ம் தேதி எலைட் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் அதன் 20 வது எழுச்சி தினத்தை லேவில் கொண்டாடியது, அதன் அனைத்து பணியாளர்களும் லடாக் பிராந்திய மக்களுக்கு முழு மனதுடன் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
 • செப்டம்பர் 1, 1999 அன்று, கார்கில் போருக்குப் பின்னர், இந்த கார்ப்ஸ் எழுப்பப்பட்டது.
வருண் தவானின் ‘கூலி நம்பர் 1’ பிளாஸ்டிக் இல்லாத முதல் பாலிவுட் படமாகும்
 • வருண் தவானின் வரவிருக்கும் திரைப்படமான “கூலி நம்பர் 1” பிளாஸ்டிக் இல்லாத முதல் பாலிவுட் படமாகும். இந்தியாவின் பிளாஸ்டிக் இல்லா இயக்கத்தை ஊக்குவிப்பதில் பாலிவுட் முன்னிலை வகிக்கிறது.
 • திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீப்சிகா தேஷ்முக் ட்விட்டரில் இந்த படம் பிளாஸ்டிக் இல்லாத முதல் பாலிவுட் படம் என்று அறிவித்து, அனைவரும் இதைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

அசாம்

அசாமின் இறுதி என்.ஆர்.சி பட்டியல் வெளியிடப்பட்டது
 • அசாமில், குடிமக்களின் இறுதி தேசிய பதிவான (என்.ஆர்.சி) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் 3.11 கோடி விண்ணப்பதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 19.07 லட்சம் பேர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
 • கூற்றுக்கள் மற்றும் முடிவுகளில் திருப்தி அடையாத எந்தவொரு நபரும் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு முன் முறையீடு செய்யலாம். அவர்கள் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் விலக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம், பின்னர் உயர் நீதிமன்றங்களிலும் முறையிடலாம்.
 • இதுபோன்ற முறையீடுகளை சமாளிக்க அசாம் அரசு மாநிலத்தில் 400 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை நிறுவியுள்ளது.

சர்வதேச செய்திகள்

தாவூதி போஹ்ரா பிரிவின் மிகப்பெரிய சபை கொழும்பில் நடைபெற்றது
 • இலங்கை தலைநகர் கொழும்பில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட சமூக உறுப்பினர்கள் பங்கேற்க்கும் தாவூதி போஹ்ரா பிரிவின் மிகப்பெரிய சபை நடைபெற்றது.
 • சமூகத்தின் ஆன்மீக குரு டாக்டர் சையத்னா முப்தால் சைஃபுதீன் ஆஷாரா முபாரகாவின் முதல் பிரசங்கத்தை ஹுசைனி மஸ்ஜித்தில் நடத்தினார்.

அறிவியல்

உலக சுகாதார அமைப்பு மனித மரபணு எடிட்டிங் குறித்த உலகளாவிய பதிவேட்டின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
 • ஐ.நா.வின் சர்வதேச பொது சுகாதார மானிட்டர், மரபணு அடிப்படையிலான சிகிச்சைகளுக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்தவும் சுற்றியுள்ள நெறிமுறை மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்ளவும் முற்படுகிறது, இதனால் மனித மரபணு எடிட்டிங் குறித்த ஆராய்ச்சியைக் கண்காணிப்பதற்கான உலகளாவிய பதிவேட்டின் முதல் கட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநாடுகள்

உலக தேர்தல் அமைப்புகள் சங்கத்தின் 4 வது பொது சபை (A-WEB)
 • இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 3 ஆம் தேதி பெங்களூரில் உலகத் தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் (A-WEB) 4 வது பொதுச் சபையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2019 முதல் 2021ஆம் ஆண்டு  வரை  இந்தியா A-WEB இன் தலைவராகவும்  பொறுப்பேற்கவுள்ளது.

திட்டங்கள்

ஸ்ராம் யோகி பிரசாத் திட்டம்
 • திரு ஷா “ஷ்ராம் யோகி பிரசாத்” திட்டத்தை தொடங்கிவுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தொழில்துறை மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மலிவான  விலையில் சத்தான காலை மற்றும் மதிய உணவை  தங்கள் பணியிடங்களில் வழக்கமான அடிப்படையில் பெறுவார்கள்.

நியமனங்கள்

மேஜர் ஜெனரல் ஜாய்ஸ் கிளாடிஸ் ரோச் (எம்.என்.எஸ்யின்) கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பொறுபேற்றுள்ளார்
 • மேஜர் ஜெனரல் ஜாய்ஸ் கிளாடிஸ் ரோச், இராணுவ நர்சிங் சேவை (எம்.என்.எஸ்) யின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் பதவியை ஏற்றுக்கொண்டார்.
 • ஏ.டி.ஜி, எம்.என்.எஸ்., ஆக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் ரோச், இராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை, ஆயுதப்படைகளின் அபேஸ் குவாட்டர்னரி பராமரிப்பு மருத்துவமனையின்  முதன்மை மேட்ரானாக பதவி வகித்தார்.
5 புதிய ஆளுநர்களின் நியமனங்கள்
 • உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பகத்சிங் கோஷ்யரி – மகாராஷ்டிராவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது – கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பண்டாரு தத்தாத்ரயா – இமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்
 • கல்ராஜ் மிஸ்ரா – ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • முன்னாள் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் – தெலுங்கானாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை 2019
 • ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஆசிய விளையாட்டில்  பதக்கம் வென்ற அபிஷேக் வர்மா தங்கம் வென்றார் மற்றும் சவுரப் திவாரி வெண்கலப்பதக்கத்தை வென்று ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை 2019 யில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!