நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –23, 2019

0

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –23, 2019

தேசிய செய்திகள்

சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் செயல்படுத்தல் குறித்த இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப்
  • மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத், இந்தியாவுக்கான சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான சர்வதேச ஒர்க்ஷாப்பை டெல்லியில் திறந்து வைத்தார்.
  • இந்திய, ஐரோப்பிய மற்றும் சர்வதேச அனுபவங்களின் பரிமாற்றம், தூய்மையான கங்காவின் தேசிய மிஷன் மற்றும் இந்தோ-ஜெர்மன் ஒத்துழைப்புடன் “கங்கா புத்துணர்ச்சிக்கான ஆதரவு” என்ற திட்டத்துடன் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டது.
மிகவும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது
  • கிராண்ட் கார்ட் பாதையில் மிகவும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் டெல்லி மற்றும் ஹவுரா இடையேயான பயண நேரத்தை தற்போதுள்ள 17-19 மணி நேரத்திலிருந்து சுமார் 12 மணி நேரமாகக் குறைப்பதற்கான எதிர்கால நோக்கத்தையும் அடைய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கிராண்ட் கார்ட் என்பது ஹவுரா-கயா-டெல்லி மற்றும் ஹவுரா-அலகாபாத்-மும்பை பாதையின் ஒரு பகுதியாகும்.
  • உத்தரபிரதேசத்தின் டண்ட்லா சந்திப்பில் உள்ள 65 ஆண்டு பழமையான மெக்கானிக்கல் சிக்னலிங் முறைக்கு பதிலாக இந்த புதிய எலக்ட்ரானிக் முறை அமைக்கப்படவுள்ளது.
உர பயன்பாடு விழிப்புணர்வு திட்டம்
  • வேளாண் உற்பத்தித்திறனைத் தக்கவைக்க பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் உர ஊட்டச்சத்துக்களின் உகந்த பயன்பாடு குறித்த அறிவை விவசாயிகளுக்கு பரப்புவதற்காகவும், மேலும் உர பயன்பாடு மற்றும் மேலாண்மை துறையில் புதிய முன்னேற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காகவும்,
  • மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஸ்ரீ டி.வி.சதானந்த கவுடா இணைந்து புதுடெல்லியில் இரு ஆண்டு உர பயன்பாட்டு விழிப்புணர்வு திட்டத்தை திறந்து வைத்தனர் .
  • காரிஃப் மற்றும் ரபி பருவத்திற்கு முன்னரே இரு அமைச்சகங்ளும் கூட்டாக இனைந்து  மாநில அரசுகளின் உதவியுடன் இந்த நிகழ்வை  ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ்நாடு

அமிர்தி விலங்கியல் பூங்காவிற்கு கடமான் மற்றும் ஒரு சில பெலிகன்கள் புதிதாக வருகை தந்துள்ளன
  • வேலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமிர்தி விலங்கியல் பூங்காவிற்கு அண்மையில் கடமான் மற்றும் ஒரு சில பெலிகன்கள் புதிதாக வருகை தந்துள்ளன.
  • வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் கல்வியாளர்களுக்கு இந்த மிருகக்காட்சிசாலை முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும்.

சர்வதேச செய்திகள்

இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் ரயில் போக்குவரத்து துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன
  • ரயில் போக்குவரத்து துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் முடிவு செய்துள்ளன. ரயில்வே துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2017 இல் கையெழுத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் (ஜே.டபிள்யூ.ஜி) 1 வது கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு கூட்டத்தில் இரு தரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
‘கிங்மேக்கர்ஜக்மீத் சிங்
  • பொதுத் தேர்தலில் 24 இடங்களை வென்ற புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய அரசியல்வாதி ஜக்மீத் சிங், ஒரு “கிங்மேக்கர்” ஆக திகழ்கிறார், அதே நேரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், லிபரல் கட்சி அதன் பெரும்பான்மையை இழந்துள்ளது .
  • பெரும்பான்மையை இழந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆட்சி அமைக்க ஜக்மீத் சிங்கின் ஆதரவு தேவை.
ஜப்பானிய பேரரசர் நருஹிட்டோ பதவியேற்றத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார்  
  • பேரரசர் நருஹிடோ நாட்டின் 126 வது பேரரசராக தன்னை முறையாக அறிவித்தார். 59 வயதான பேரரசர் அவரது தந்தையான அகிஹிட்டோவிற்கு பின்னர் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியைத் தொடங்கினார்.
  • ஆனால், டோக்கியோவில் உள்ள ஏகாதிபத்திய அரண்மனைக்குள் தொடர்ச்சியான பாரம்பரிய சடங்குகளுக்குப் பிறகு, அவரது ஆட்சி இப்போது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநாடுகள்

பிராந்திய தொழிலாளர் மாநாடு
  • புவனேஸ்வரில் பிராந்திய தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ சந்தோஷ்குமார் கங்வார்,,தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்கின்றன என்று அவர் கூறினார்.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்க பிராந்திய மாநாடுகள் உதவுகின்றன.

விருதுகள்

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2019
  • பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய பஞ்சாயத்து விருதுகள்  2019 ஐ   புதுடில்லியில் நடந்த விழாவில்  வழங்கினார்.
  • விருதுகள் பல்வேறு பிரிவுகளில் விருது பெற்ற பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கப்படும். இந்த பிரிவுகள் தீன் தயால் உபாத்யாய் பஞ்சாயத்து சஷக்திகரன் புரஸ்கார் , நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ் கிராம சபா புரஸ்கார், கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்ட விருது, குழந்தை நட்பு கிராம பஞ்சாயத்துகள் விருது மற்றும் இ-பஞ்சாயத்து புரஸ்கார்.
  • சேவைகளை வழங்குதல் மற்றும் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் செய்த நல்ல பணிகளை அங்கீகரிக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு செய்திகள்

அந்தமான் நிக்கோபாரில் உள்ள ட்ராக் தீவில் ஐ.ஏ.எஃப் இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகளை சோதனை செய்தது
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ட்ராக் தீவில் இந்திய விமானப்படையால் இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகள் வீசப்பட்டன. வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த இரட்டை ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
  • இந்த ஏவுகணைகளின் பயிற்சி ஒரு மொபைல் தளத்திலிருந்து துல்லியமாக  தரை  இலக்குகளை தாக்குவதில்  விமானப்படையின்  திறனை மேம்படுத்தியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

யுடிடி தேசிய தரவரிசை (கிழக்கு மண்டலம்) டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
  • ஹவுரா உட்புற மைதானத்தில் நடைபெற்ற தேசிய தரவரிசை (கிழக்கு மண்டலம்) டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஜூனியர் சிறுவர்களின் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வ தீனதயலன் கைப்பற்றினார். மேலும் அவர் இப்பட்டதை வென்றதன் மூலம் தனது வயதுக்குட்பட்ட பிரிவில் ஹாட்ரிக் பட்டங்களை பெற்றுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த தியா சிதாலே தனது முதல் ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்  பட்டத்தை  பெற்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!