நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –02, 2019

0

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் –02, 2019

முக்கியமான நாட்கள்

அக்டோபர் 02 – சர்வதேச அகிம்சை தினம்
 • அக்டோபர் 2 ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினம், இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவரும், அகிம்சையின் தத்துவம் மற்றும் மூலோபாயத்தின் முன்னோடியுமான மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கிறது
 • 15 ஜூன் 2007 இன் பொதுச் சபைத் தீர்மானத்தின் A / RES / 61/271 இன் படி, இந்த தினம் “கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு மூலம் அகிம்சையின் செய்தியை பரப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.

தேசிய செய்திகள்

மகாத்மா காந்தியின்  150 வது பிறந்த நாள்
 • பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்கான வெற்றிகரமான பிரச்சாரத்தை வழிநடத்த வன்முறையற்ற எதிர்ப்பைப் பயன்படுத்திய அரசியல் நெறிமுறையாளரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869 இல் பிறந்தார்.
 • தேசத்தின் தந்தை என்று அன்பாக நினைவுகூரப்படும் இவர் உலகெங்கிலும் உள்ள சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இயக்கங்களை ஊக்கப்படுத்தியவர் என்று அறியப்படுகிறது.
 • மகாத்மா காந்தியின் பிறந்த நாள், அக்டோபர் 2, இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்ற தேசிய விடுமுறையாக நினைவுகூரப்படுவது மட்டுமல்லாமல், சர்வதேச அகிம்சை தினமாக உலகளவில் கொண்டாடப்படுகிறது.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள்
 • அக்டோபர் 2 ஆம் தேதியில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நினைவுகூரப்பட்டது.சாஸ்திரியின் தலைமையில், பாகிஸ்தானுக்கு எதிரான 1965 போரில் இந்தியா வெற்றி பெற்றது. ராணுவப் படையினரையும் விவசாயிகளையும் உற்சாகப்படுத்த ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற சக்திவாய்ந்த முழக்கத்தை அவர் தேசத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பரியதன் பர்வ் 2019”
 • பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் நாடு தழுவிய “பரியதன் பர்வ் 2019” ஐ புது தில்லியில் தொடங்கி வைத்தார். சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பரியதன் பர்வ் 2019 நாடு முழுவதும் 2019 அக்டோபர் 2 முதல் 13 வரை நடைபெறும்.
 • சுற்றுலாவின் நன்மைகள் குறித்து கவனம் செலுத்துவதும், நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் காண்பிப்பதும், “அனைவருக்கும் சுற்றுலா” என்ற கொள்கையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பரியதன் பர்வ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா முழுமையாக மின்மயமாக்கப்பட்ட மாநிலமாக மாறியது
 • அக்டோபர் 2017 இல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய சவுபாக்ய யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கிய பின்னர் தெலுங்கானா நாட்டின் முழு மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
 • கடந்த இரண்டு ஆண்டுகளில், முழு மாநிலத்திற்கும் மேலும் தொலைதூர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

சீனா தனது  70 ஆண்டுகால கம்யூனிசத்தை கொண்டாடியது
 • சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி) நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவை இராணுவ அணிவகுப்புடன் சீனா கொண்டாடியது.
 • கம்யூனிச சக்திகள் உள்நாட்டுப் போரை வென்றபின், 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி,தலைவர் மாவோ என்று அழைக்கப்பட்ட மாவோ சேதுங் பி.ஆர்.சி சீன மக்கள் குடியரசை  அமைப்பதாக அறிவித்தார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேபாளத்தில்  “காதி நேபாளம்” பேஷன் ஷோ
 • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு , இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து காதி மற்றும் கைத்தறி ஆடைகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்த “காதி நேபாளம்” பேஷன் ஷோ காத்மாண்டுவில் நடைபெற்றது.
 • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பகுதியாக தெற்காசியா அறக்கட்டளையுடன் இணைந்து இந்திய தூதரகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
மகாத்மா காந்தியின் நினைவாக உஸ்பெகிஸ்தான் அஞ்சல் முத்திரையை வெளியிட்டது
 • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளைக் நினைவுகூரும் வகையில் உஸ்பெகிஸ்தான் அரசு சிறப்பு அஞ்சல் முத்திரையை வெளியிட்டுள்ளது.
 • உஸ்பெகிஸ்தானில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தபால் துறையின் கூட்டு முயற்சியாக இந்த முத்திரையை வெளியிடபட்டுள்ளது.
ரஷ்யா கலாஷ்னிகோவின் 100 வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளது
 • ஏ.கே .47 வடிவமைப்பாளரான கலாஷ்னிகோவின் வாழ்க்கையை, ரஷ்யா அடுத்த மாதம் அருங்காட்சியக காட்சி மற்றும் வாழ்க்கை வரலாறு உட்பட பல நிகழ்வுகளுடன் கொண்டாடவுள்ளது.
 • ஏ.கே .47 வடிவமைப்பாளர் தேசத்தின் ஹீரோவாகவும், பெருமைமிக்க இராணுவத்தின்   கடந்த கால அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார்

அறிவியல்

2006 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோளுக்கு பண்டிட் ஜஸ்ராஜ் பெயர் சூட்டப்பட்டுள்ளது
 • சர்வதேச வானியல் ஒன்றியம் (ஐ.ஏ.யு) 2006 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோளுக்கு இந்திய கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜின் என்று பெயரிட்டுள்ளது.
 • “சங்கீத் மார்டண்ட் பண்டிட் ஜஸ்ராஜ் (பி. 1930) இந்திய கிளாசிக்கல் இசையின் முன்னோடி ஆவார்.
 • பாடகரின் பெயர் சூட்டப்பட்ட அந்த சிறுகோள், அல்லது சிறிய கிரகம் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் நவம்பர் 11, 2006 அன்று  கேடலினா ஸ்கை சர்வே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் தொலைநோக்கிகள் அமெரிக்காவின் அரிசோனாவில் அமைந்துள்ளன.

பாதுகாப்பு செய்திகள்

ராணுவ நர்சிங் சேவை 94 வது தொடக்க  தினத்தை கொண்டாடியது
 • இராணுவ நர்சிங் சேவையின் (எம்.என்.எஸ்) 94 வது தொடக்க நாள் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கூடுதல் இயக்குநர் ஜெனரல் (எம்.என்.எஸ்) மேஜர் ஜெனரல் ஜாய்ஸ் கிளாடிஸ் தேசிய போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார்.
 • இந்த நிகழ்வில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியைப் படிப்பதன் மூலம் நர்சிங் அதிகாரிகள் தங்கள் நோயாளிகளுக்கு உயர் தரமான, தன்னலமற்ற நர்சிங் பராமரிப்பை வழங்குவதற்காக தங்களை மீண்டும் அர்ப்பணித்தனர்.

நியமனங்கள்

ஸ்ரீ பிரதீப்த குமார் பிசோய் அஞ்சல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்
 • அஞ்சல் துறை செயலாளர் பதவிக்கு ஸ்ரீ பிரதீப்த குமார் பிசோயை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவர் அஞ்சல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா விமானப் பணியாளர்களின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்
 • ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா விமானப்படை துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் 1981 டிசம்பரில் இந்திய விமானப்படையில் போர் விமானியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஏர் எம்.எஸ்.எல் அரோராவின் சிறப்பான சேவைக்காக  இந்திய ஜனாதிபதி 26 ஜனவரி 2011 அன்று  ‘அதி விஷித் சேவா பதக்கத்தை அவருக்கு வழங்கினார்.

விளையாட்டு செய்திகள்

குமார் சங்கக்காரா எம்.சி.சி தலைவராக பொறுப்பேற்றார்
 • இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவராக பொறுப்பேற்றார். அவரது பதவி காலம் ஒரு வருடம் ஆகும்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here