நடப்பு நிகழ்வுகள் – மே 26 & 27, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 26 & 27, 2019

தேசிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தது
  • இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை 1951 ஆம் ஆண்டின் மக்கள் சட்டத்தின் பிரிவு 73 ன் படி பட்டியலை இந்திய குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பித்தது
மே 30 தேதி  திரு.நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார்
  • மே 30 ம் தேதி இரவு 7 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு  இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

சந்திப்புகள்

  • சிக்கிம் முதலமைச்சர் – திரு. பிரேம் சிங் தமங் –  S. கோலே என்றும் அழைக்கப்படுவார் 

அறிவியல்

ஒடிசா உயிர்க்கோளக் காப்பகத்தில் புதிய கொடிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஆஹதுல்லா[Ahaetulla] இனத்தைச் சேர்ந்த கொடிய வகை பாம்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அஹதுல்லா லாவ்டான்கியா[Ahaetulla laudankia] என்ற பாம்பு இனம் ஒடிசாவின் லூலுங்கின் அருகே உள்ள சிம்லிபல் உயிர்க்கோளக் காப்பகத்தில் முதன் முதலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறை வெப்பநிலையில் மீக்கடத்தல் திருப்பத்தை உறுதிப்படுத்தியது ஐஐஎஸ்சி குழு
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் அன்சு பாண்டே தலைமையிலான குழு அவர்களின் பொருட்கள் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றில் மீக்கடத்தலின் முக்கிய பண்புகளை வெளிப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்தியது.
இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளில் பனியுக காலத்து கடல் நீர்
  • பனியுக காலத்தின் கடல் நீர் எச்சத்தை முதன்முதலாக ஆராய்ச்சியாளர்கள் இந்தியப் பெருங்கடலின் நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளில் கண்டுபிடித்துள்ளனர். மாலத்தீவு சுண்ணாம்பு வைப்புகளால் உருவானது என ஒரு மாத கால விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாநாடுகள்

தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திரு ஜான் பெய்லியுடன் சிறப்பு செயல் அமர்வுக்கு ஏற்பாடு
  • தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஒரு பெரும் முயற்சியாக புதுடில்லியிலுள்ள சிரி கோட்டையில் மே 28 அன்று, அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் தலைவர் திரு. ஜான் பெய்லியுடன் சிறப்பு செயல் அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.

விளையாட்டு செய்திகள்

PSA சேலஞ்சர் சுற்றுப்பயணம்
  • PSA சேலஞ்சர் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் இந்திய ஸ்குவாஷ் வீரர் மகேஷ் மங்கோன்கர் ஸ்பானிநார்ட் பெர்னட் ஜுமெய்னை வீழ்த்தி செகிஸுய் ஓபன் ல் வெற்றிப்பெற்றார்.
சுதிர்மான் கோப்பை
  • ஜப்பானை வீழ்த்தி 11 வது சுதிர்மான் கோப்பை பட்டத்தை சீனா வென்றது. சீனாவின் ஷி யூகி உலக சாம்பியனான கெண்டோ மொமோட்டோவை வீழ்த்தினார். ஜப்பான் இதுவரை பேட்மின்டன் உலக கலப்பு அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நானிங்கில் நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது சீனா.
மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2019
  • லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடிஸ் அணிக்காக மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2019 பட்டத்தை வென்றார், ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாம் இடம் பிடித்தார், மெர்சிடஸ் அணியின் வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூடு உலக கோப்பை
  • துப்பாக்கிச்சூடு உலக கோப்பைத் தொடரின் முதல் நாளில் பெண்களின் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சூடு பிரிவில் அபுர்வி சண்டேலா தங்கம் வென்றார். இந்தப் பருவத்தில் அபுர்வி சண்டேலா பெறும் இரண்டாவது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 26 & 27, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!