நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019

தேசிய செய்திகள்:

தேசிய புற்று நோய் கழகத்துடன் NHA ஒப்பந்தம்

  • புற்றுநோயில் இருந்து காப்பதற்காக புற்றுநோய் நோயாளிகளின்  கவனிப்பில் சீரான தரத்தை கொண்டுவரும் நோக்கத்தோடு  தேசிய சுகாதார ஆணையத்துடன்  தேசிய புற்று நோய் கழகம் இணைந்து Ayushman Bharat-Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY) திட்டத்தின் கீழ்  ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாடு:

தமிழ்நாடு பெட்ரோ லாபம் 14% அதிகரிப்பு

  • தமிழ்நாடு பெட்ரோ பொருட்கள்  லிமிடெட், (டிபிஎல்) அதன் முழுமையான நிகர இலாபத்தில் ரூபாய் 14.36% வளர்ச்சி கண்டுள்ளது.  மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த 2019 காலாண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 36% அதிகமாக 11.39 கோடி ரூபாய் லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழ்நாடு பெட்ரோ பொருட்களின் லாபம் 9.96 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மாநாடு:

சத்தம், அதிர்வு மற்றும் கடுமையின் மீதான சர்வதேச கருத்தரங்கிற்கு ICAT ஏற்பாடு

  • ICAT மானேசரில் சத்தம், அதிர்வு மற்றும் கடுமையின் மீதான சர்வதேச கருத்தரங்கு (iNVH) மற்றும் ஒர்க்ஷாப்பை சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் (ICAT) 2019 மே 23 மற்றும் 24ம் தேதி ஏற்பாடு செய்துள்ளது.

விண்வெளி அறிவியல்:

எலோன் மஸ்கின் Starlink இணைய சேவைக்கு SpaceX முதல் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது

  • ஹை டெக் தொழில் முனைவர் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது புதிய Starlink இணைய சேவைக்கு ஐந்து டஜன் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல ஃபால்கோன் 9 விண்வெளிக்கலன் ஒன்றை அனுப்பியுள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்பு:

வெளுக்கும் பவளப்பாறை மண்டபம் , கீழக்கரை, பாக்கு நீரிணை அருகே கண்டுபிடிப்பு

  • புவியியல் அமைச்சகம் கீழ் உள்ள கரையோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் ஒரு புல ஆராய்ச்சி நிலையம் மன்னார் கணவாய் வளைகுடாவில் உள்ளது அங்கு வெளுக்கும் பவளப்பாறைகளை கீழக்கரை, பாக்கு நீரிணை அருகே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்:

காந்தவிசை ரயில் முன்மாதிரியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

  • காந்தவிசையில் இயங்கும் புதிய அதிவேக ரயிலின் முன்மாதிரியை சீனா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்ல கூடியதாய் வடிவமைக்கப்படவுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்:

தெரேசா மே ஜூன் 7-ம் தேதி பதவி விலக முடிவு

  • கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வருகிற ஜூன் 7-ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் தெரேசா மே. அதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்திலேயே புதிய தலைவருக்கான தேர்தல் பணி தொடங்கிவிடும் என அறிவித்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்:

இந்திய ஓபன் குத்துச்சண்டை

  • இந்தோரில் நடந்த இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், சக நாட்டு வீராங்கனை நிகத் சாரின் 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் 6 முறை உலக சாம்பியன் ஆன இந்திய வீராங்கனை மேரி கோம்

FIFA 2022 உலகக் கோப்பை போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கும் முடிவை கைவிட்டது

  • கத்தார் நகரில் நடைபெறவுள்ள 2022 உலகக் கோப்பை போட்டியில் முன்மொழியப்பட்ட விரிவாக்கத்தை கைவிட FIFA முடிவு. உலகக் கால்பந்து அணியின் தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆவர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!