நடப்பு நிகழ்வுகள் – மே 23, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 23, 2019

முக்கியமான நாட்கள்

மே 23 – மகப்பேறியல் ஃபிஸ்துலா’வுக்கு முடிவுகாணும் சர்வதேச தினம்

 • மகப்பேறியல் ஃபிஸ்துலா’வுக்கு முடிவுகாணும் சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) சபையால் மே 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் வளரும் நாடுகளில் பல பெண்களை பாதிக்கும் மகப்பேறியல் ஃபிஸ்துலாவுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கிறது.

தேசிய செய்திகள்

நான்கு நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு

 • உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நான்கு நீதிபதிகளை பதவி உயர்வு செய்யும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நீதிபதி அனிருதா போஸ், நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா கந்த் ஆகியோர் அந்த நான்கு நீதிபதிகள் ஆவர்.
 • இதன்மூலம் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கையான 31 நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் அடைந்துவிடும். தற்போது தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செய்திகள்

சாக்கோஸ் தீவு .நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது

 • ஐ.நா. பொதுச் சபையின் இங்கிலாந்தின் “காலனித்துவ நிர்வாகத்தை” திரும்பப்பெற மற்றும் ஆறு மாதங்களுக்குள் நிபந்தனையற்ற வகையில் சாக்கோஸ் தீபகற்பத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 116 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியப்பெருங்கடலில் உள்ள மொரிஷியஸ் நாட்டின் சுயாட்சியை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த ஆதரவை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது பாகிஸ்தான்

 • பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷஹீன் -2 ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்தது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் இந்த ஏவுகணை 1,500 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை குறி வைத்து தாக்க கூடிய வல்லமை படைத்தது.

வணிகம் & பொருளாதாரம்

2020ம் நிதியாண்டில் இந்தியா 7.1 சதவிகிதம் வளர்ச்சி: .நா. அறிக்கை

 • 2020ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டால்1 சதவீத வளர்ச்சியை அடையும் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறியுள்ளது.

நியமனங்கள்

 • சிரில் ரமபோசா – தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
 • அக்ஷய் குமார் – டாபேயின் பிராண்ட் தூதர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புற்றுநோய் ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 • இந்திய உயிர் தொழில்நுட்பத் துறை (DBT) மற்றும் அணுசக்தித் துறை (DAE) இடையே புற்றுநோய் ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

பாதுகாப்பு செய்திகள்

Su-30 MKI போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

 • இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக Su-30 MKI போர் விமானத்தில் இருந்து சோதனை செய்தது. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் விமானம் மூலம்8 மேக் வகையிலான ஏவுகணையை செலுத்தி கடலில் உள்ள இலக்கை அளித்து உலகின் முதல் விமானப்படையாக இந்தியா சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையிலான இரண்டாவது பரிசோதனை இதுவாகும்.

மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா கடற்படை பயிற்சி

 • அமெரிக்க கடற்படை கப்பல்கள் மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து முதல் கூட்டு கடற்படை பயிற்சியை மேற்கொண்டது. இந்த பசிபிக் வான்கார்ட் கூட்டுப்பயிற்சி அமெரிக்கத் தீவான குவாம் தீவு அருகே நடைபெற்றது.

விளையாட்டு செய்திகள்

தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது

 • ஜின்சியானில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி தென் கொரியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

சுதிர்மான் கோப்பை

 • இரண்டாவது மற்றும் கடைசி குழுப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் 10 முறை சாம்பியனான சீனாவிடம் இந்தியா வீழ்ந்து சுதிர்மான் கோப்பை கலப்பு அணி பேட்மின்டன் போட்டியிலிருந்து வெளியேறியது.

Download PDF

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here