நடப்பு நிகழ்வுகள் – மே 11 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 11 2019

முக்கியமான நாட்கள்

மே 11 – உலக வலசை போதல் தினம்

  • பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன. வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக வலசை போதல் தினம் மே மாத இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2019 தீம் Protect Birds: Be the Solution to Plastic Pollution

தேசிய செய்திகள்

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்

  • கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி தயாரித்து வரும் லேஸ் சிப்ஸ்க்காக காப்புரிமை வாங்கிய FC5 ரக உருளைக்கிழங்கை குஜராத் விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் நான்கு விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்தது பெப்சி நிறுவனம். அதில், நான்கு விவசாயிகளும் தலா 1கோடி வழங்க வேண்டும் என பெப்சி நிறுவனம் கேட்டுக் கொண்டது. உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்.

ஜெட் அலுவலக இடத்தை எடுத்துக்கொள்ள ஏஏஐ நடவடிக்கை

  • பல விமான நிலையங்களில் உள்ள ஜெட் ஏர்வேஸ் அலுவலகங்களை எடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரசபை (ஏஏஐ) தொடங்கியது.

உச்ச நீதிமன்றம் அயோத்தி மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் வழங்கியது

  • அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், சுமுக தீர்வு காண, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என, மூன்று பேர் அடங்கிய மத்தியஸ்த குழு, உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, ஆகஸ்ட், 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி, கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி (CJI) ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் விசாரதித்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செய்திகள்

இந்தியாவும், இங்கிலாந்தும் இந்தியா பசிபிக் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புதல்

  • இந்தியா-பசிபிக் ஒத்துழைப்பு, காலநிலை மாற்றங்கள், பேரழிவு நிலைத்தன்மை, மூன்றாம் உலக நாடுகளில் பிற பகுதிகளில் உள்ள வளர்ச்சி ஆகியவற்றில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒப்புக்கொண்டது.

அறிவியல் செய்திகள்

சந்திரயான் -2

  • சந்திரயான் – 2, ஜூலை 9-16 தேதிகளில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. 3,800 கிலோ எடைகொண்ட விண்கலம் சந்திரனில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் சந்திரனை சுற்றிவரும்; விக்ரம் என்ற ஐந்து கால் கொண்ட லேண்டர் சந்திரனில் செப்டம்பர் 6 ம் தேதிக்குள் இறங்கும்; மற்றும் ஒரு ரோபாட் ரோவர், பிரக்யான், சந்திரனின் நிலப்பரப்பை சுற்றி ஆய்வு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தனர்.

மாநாடுகள்

வளர்ந்து வரும் நாடுகளின் உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம்

  • இந்தியாவால் நடத்தப்படும் வளரும் நாடுகளின் WTO அமைச்சரவைக் கூட்டம் 2019 ஆம் ஆண்டு 13-14 மே மாதம் வரை புதுடில்லியில் நடைபெறவுள்ளது. பதினாறு வளர்ந்து வரும் நாடுகள், ஆறு குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (LDC) மற்றும் உலக வர்த்தக அமைப்பின்[WTO] பொது இயக்குனர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

நியமனங்கள்

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா

  • நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தினேஷ் மகேஷ்வரி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால தலைமை நீதிபதியாக நீதிபதி லிங்கப்பா நாராயண சுவாமி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொங்கன் ரயில்வே நேபாளத்துடன் ஒப்பந்தம்

  • கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) நேபாளின் இரயில்வே துறைக்கு இரண்டு 1600 HP DEMU ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

விளையாட்டு செய்திகள்

ITF பெண்கள் டென்னிஸ் போட்டிகள்

  • சீனாவில் நடக்கும் ஐ.டி.எப். பெண்கள் டென்னிஸ் போட்டியில் அன்கிதா ரெய்னா அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 11 2019

Daily Current Affairs – May 11 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!