நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 31, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 31, 2019

சர்வதேச நிகழ்வுகள்:

இலங்கையில் வெப்பநிலை கட்டுப்பாட்டிர்க்கான குளிர் சேமிப்பக வசதிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

  • இலங்கையில், இந்தியா மானியம் வழங்கிய புதிய 5000 மெட்ரிக் டன் வெப்பநிலை கட்டுப்பாட்டு குளிர் சேமிப்பக வசதிக்கான அடித்தளம் தம்புலாவில் நிறுவப்பட்டது.
  • விவசாயகளுக்கு அறுவடைக்குப் பின் நிகழும் அறுவடை இழப்பு மற்றும் வீணாவதை குறைப்பதற்கு எடுக்கப்படும் முன்முயற்சியாகும்.

ஸ்லோவாக்கியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி: சுசானா காபுடோவா

  • ஸ்லோவாக்கியாவில், அரசு விமர்சகர் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலரான சுசானா காபுடோவா முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனைத்து இந்திய பட்டபடிப்பிற்கும் சமநிலை வழங்கியுள்ளது

  • வளைகுடா நாட்டில் வேலைகள் பெறுவதில் சிரமப்படுவதற்கு ஒரு பெரிய நிவாரணமாகக் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அனைத்து இந்திய பட்டங்களுக்கும் பொருந்தும் வகையில் சமநிலை வழங்கியுள்ளது

அறிவியல் & விஞ்ஞானம்

IIT மெட்ராஸ் பெட்ரோலியம் கழிவுகளை பயனுள்ள வினைபொருள் மாற்றியுள்ளது

  • பிளாட்டினம் நானோக்காலிஸ்ட்டைப் பயன்படுத்தி, சென்னை ஐ.ஐ.டி.யின் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு வெற்றிகரமாக பெட்ரோலியம் கழிவுகளான டொலுவீன் வேதிப்பொருளை பெனோசிக் அமிலமாக மாற்றியுள்ளது.
  • பெனோசிக் அமிலம் உணவு பாதுகாப்பு (E210) மற்றும் பூஞ்சை / பாக்டீரியா தொற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

நாட்டின் முதல் செயற்கைகோள் EMISAT- ஐ வானில் சுமந்து செல்லும் PSLV

  • இராணுவத்திற்கு விரோதமான ரேடர்களைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படும் மின்னணு நுண்ணறிவை (ELINT) சேகரிப்பதற்காக நாட்டின் முதல் செயற்கைகோள் EMISAT- ஐ வானில் சுமந்து செல்லும் PSLV தயாராக உள்ளது.
  • இதுவே இந்திய துருவ செயற்கைகோள் சுமந்து செல்லும் PSLV யில் பெரியதாகும்.
  • ஏப்ரல் முதலாம் தேதி செலுத்தப்படும் இந்த PSLV நான்கு நாடுகளின் 28 சிறிய ரக வெளிநாட்டு வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல தயார் படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்:

இந்தியா ஓபன் பேட்மிட்டன் இறுதிப்போட்டி

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்ஸனுக்கு எதிரான இறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியுற்றார்.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி

  • மலேசியாவில் உள்ள ஐபோவில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் தென் கொரியா 4-2 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!