நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 30, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 30, 2019

தேசிய நிகழ்வுகள்:

புது தில்லி

எதிர் செயற்கைக்கோள் சோதனை

  • மிஷன் சக்தியின் கீழ் செயற்கைக்கோள் அழிப்பதற்கு இலக்காக இருக்கும் எதிர்ப்பு செயற்கைக்கோள் ஏவுகணை (ASAT) ஏவுகணை குறைந்தபட்சம் 270 துண்டுகளாக உடைக்கப்பட்டும், அவற்றில் பெரும்பாலானவை 45 நாட்களுக்குள் சிதைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த எதிர்ப்பு செயற்கைகோள் குறைந்தபட்சம் 270 துண்டுகளாக சிதைந்துள்ளதை வட அமெரிக்க ஏரோஸ்பேஸ் பாதுகாப்புக் கட்டளை (NORAD) மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்:

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு வலியுறுத்தல்

  • பாகிஸ்தான், அதன் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தமுள்ள, மீற முடியாத மற்றும் சரிபாடுத்தக்கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மற்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை

  • பெய்ஜிங்கில் சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி உள்ளது, இது இருநாடுகளின் வர்த்தக போர் முடிவுக்கு வர எடுக்கப்பட்ட முன்முயற்சியாகும்.

வணிக & பொருளாதாரம்:

நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 வங்கி கிளைளை திறக்க RBI உத்தரவு

  • ரிசர்வ் வங்கி, அரசாங்க வணிக செயல்பாடுகளை கையாள நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 ஞாயிற்று கிழமை வங்கி கிளைகள் திறக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவு.

அறிவியல் & விஞ்ஞானம்

மனிதர்கள் பூமியின் காந்தப்புலங்களை உணர முடியும்  என கண்டுபிடிப்பு

  • அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் டோக்கியோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, பூமியின் காந்தப்புலங்களில் உள்ள மாற்றங்களை மனிதர்கள் தங்களை அறியாமல் உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுகிறார்கள் என கண்டுபிடித்துள்ளனர்.
  • ஆமைகள், பறவைகள், தேனீக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பூமியின் காந்தப்புலத்தை உணரக்கூடியனவாகவும், வழிநடத்துதலுக்காக அவற்றைப் பயன்படுத்தவும் நீண்ட காலம் அறிந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடுகள்

இந்தியா-பொலிவியா வணிக மன்றம்

  • இந்தியா-பொலிவியா வணிக மன்றத்தில் இந்திய ஜனாதிபதி உரையாற்றினார். அப்பொழுது பொலிவிய தங்கத்தின் 60% இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,
  • பொலிவியா லத்தீன் அமெரிக்கா பிராந்தியத்தில் இந்தியாவின் 8 வது முக்கிய வர்த்தக பங்காளியாக பொலிவியா எனவும். மற்றும் நிதி அபிவிருத்தி திட்டங்களுக்காக பொலிவியாவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நியமனங்கள்

  • அட்மிரல் சூராஜ் பெர்ரி – கிழக்கு கடற்படை கட்டளை கொடி அதிகாரி
  • மகேஷ் சிங் – கர்நாடகா பகுதிக்கு கட்டளை கொடி அதிகாரி
  • சஞ்சய் ஜெயவர்தனாவலு – தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)
  • சதீஷ் ரெட்டி – துணைத் தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) (தெற்கு)

 ஒப்பந்தங்கள்

இந்தியா – பொலிவியா இடையே ஒப்பந்தம்

  • இந்தியா மற்றும் பொலிவியா கலாச்சாரம், விஞ்ஞானிகளுக்கான விசா தள்ளுபடி ஒப்பந்தம், இராஜதந்திர கல்வி நிலையங்கள், சுரங்கங்கள், விண்வெளி, பாரம்பரிய மருத்துவம், ஐடி மற்றும் பி-ஓசியானிக் ரயில்வே திட்டத்தின் சிறப்பு மையம் ஆகியவற்றிற்க்கான எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

விருதுகள்

  • “Condor de Los Andes en el Grado de Gran Collar” (பொலிவியாவின் மிக உயர்ந்த மரியாதைக்கான விருது) – இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
  • புவி நாள் விருது – அலெம்பா இம்சுங்கர் (நாகலாந்தின் கிஃபைர் மாவட்டத்தில் உள்ள Fakim ​​வனவிலங்கு சரணாலய வன காவலர்)

செயலி & இணையத்தளம்

‘சங்கல்ப்’ (sangalp) செயலி

  • அஸ்ஸாமில், பொங்கைகோன் மாவட்ட நிர்வாகம் முதல் தடவை வாக்காளர்களுக்குகான ஒரு மொபைல் பயன்பாட்டு செயலி சன்கல்பை உருவாக்கியுள்ளது.
  • இது முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க ஒரு சிறப்பு முயற்சியாகும்.

விளையாட்டு நிகழ்வுகள்:

இந்தியா ஓபன் பேட்மின்டன்

  • இந்திய ஓபன் பேட்மின்டன் அரை இறுதிப்போட்டியில் சீனாவின் ஹுவாங் யுவியங்கியாவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

பிப்ரவரி 30 நடப்பு நிகழ்வுகள் video – கிளிக் செய்யவும்

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!