நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 16 & 17, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 16 & 17, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 16 – உலக கடல் ஆமை நாள்
 • உலக கடல் ஆமை தினம் ஜூன் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. கடல் ஆமைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன மற்றும் அவை ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியமானவை, கடல் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் ஆமைகளின் ஏழு வகைகளும் இனப்பெருக்கம் மற்றும் உயிர்வாழ்வதற்காக  பெருங்கடல்கள் மற்றும் நிலங்களின் ஆரோக்கியத்தை சார்ந்து உள்ளன .  காலநிலை மாற்றம்,மாசுபாடு, வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் ஆகியவை அவைகளை  அச்சுறுத்தும் நிலையில் உள்ளன , பல வகையான கடல் ஆமைகள் அழிவுக்கு நேராக தள்ளப்பட்டுவருகின்றன .
ஜூன் 16 – வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பதற்க்கான சர்வதேச தினம்
 • வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பதற்க்கான சர்வதேச தினம் (ஐ.டி.எஃப்.ஆர்) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (A / RES / 72/281) இந்த தீர்மானத்தின் படி ஏற்றுக்கொண்டு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அனுசரிப்பு ஆகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
 • 800 மில்லியனுக்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், தங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
ஜூன் 17 – உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்
 • ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாகுதலைஎதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச முயற்சிகளைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக , பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தரங்களுடனும் சிக்கல்களைத் தீர்த்தல், வலுவான சமூக ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மூலமே நில சீரழிவு பிரச்சனையில்  நடுநிலை என்பது அடையமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாகும் இந்த தினம் . 2019 தீம் “எதிர்காலத்தை ஒன்றாக வளர்ப்போம்”

தேசிய செய்திகள்

அசாம்
அசாம் அரசு தர்ராங் மாவட்டத்தில் திறன் பல்கலைக்கழகம் அமைக்க உள்ளது
 • அசாம் அரசு தர்ராங் மாவட்டத்தில் 850 கோடி ரூபாய் செலவில் திறன் பல்கலைக்கழகம் அமைக்க உள்ளது.  இந்த நிறுவனம் திறன் நகரம் என்று அறியப்படும் என்று அசாம் திறன் மேம்பாட்டு மிஷன் இயக்குநர் ஏ.பி. திவாரி தெரிவித்தார். இது 10 ஆயிரம் இடங்களைக் கொண்ட நாட்டின் முதல் திறன் பல்கலைக்கழகமாக அமைய உள்ளது .
ஜம்மு & காஷ்மீர்
ஜீலம் நதி மீதான வெள்ள மேலாண்மை பணிகளுக்கான 2 வது கட்ட விரிவான திட்டத்திற்கு ஜே & கே ஒப்புதல் அளித்துள்ளது
 • ஜீலம் நதியில் 5,400 கோடி ரூபாய் செலவில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கான விரிவான திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 2014 இன் பேரழிவிற்க்கு காரணமான வெள்ளத்தைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெள்ளத்தைத் தணிப்பதற்கும், மத்திய அரசின் மூலம் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் பேரிலும் இந்த பன்முக மூலோபாயம் பின்பற்றப்பட்டது.
கேரளா
‘கரிமீன் இனத்தை பாதுகாக்க ஏரிகளில் பிரத்யேக மண்டலங்கள்
 • அஷ்டமுடி மற்றும் வேம்பநாடு ஏரிகளின் கரையோரங்களில் பாதிக்கப்படக்கூடிய உப்பு நீர் மீன்களின் பெரிய அளவிலான இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு உதவ, குறிப்பாக முத்து ஸ்பாட் (கரிமீன்) என்று சொல்லப்படும் ஒரு சுவையான மீன் இனத்தை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட இருப்புக்களை உருவாக்க கேரளாவின் மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

சீனாவின் மிகப் பெரிய பிக்காசோ கண்காட்சி
 • சீனாவில் மிகப்பெரிய பிக்காசோ கண்காட்சி நடைபெற்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட படைப்புகளை உள்ளடக்கியது, அவற்றில் பல பிக்காசோவின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்து வந்தவை ஆகும். சிறப்புப் படைப்புகளில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றுடன் பார்சிலோனா மற்றும் பாரிஸில் உள்ள இளம் பப்லோவின் புகைப்படங்களும் அடங்கும். சீனாவில் முதல் பிக்காசோ கண்காட்சி 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டு கண்காட்சி, பெய்ஜிங்கில் உள்ள தற்கால கலைக்கான யு.சி.சி.ஏ மையத்தில் செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பிக்காசோவின் முதல் 30 ஆண்டுகளின் கலையில் கவனம் செலுத்த உள்ளது..

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சர்வதேச பல்சர் நேர வரிசை (IPTA) சந்திப்பை என்.சி.ஆர்..(NCRA) நடத்தவுள்ளது
 • புனேவில் அமைந்துள்ள தேசிய வானொலி வானியற்பியல் மையம் (NCRA) ஜூன் 17 முதல் 21 வரை ஐந்து நாள் வருடாந்திர சர்வதேச பல்சர் நேர வரிசை (IPTA) கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த சந்திப்பு உலகெங்கிலும் உள்ள 12 நாடுகளைச் சேர்ந்த வானொலி வானியலாளர்களின் ஒத்துழைப்பாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் இருந்து இந்தியா சர்வதேச பல்சர் நேர வரிசை (ஐபிடிஏ) வின் இணை உறுப்பினராக இருந்து வருகிறது, ஆனால் இந்தியா வருடாந்திர கூட்டத்தை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

மாநாடுகள்

எரிசக்தி மாற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் குறித்த ஜி 20 அமைச்சரவைக் கூட்டம்
 • ஜூன் 2019 15 -16 தேதிகளில் மாதம் ஜப்பாநின் , நகனோ பெர்பெக்சர் , கருய்சாவா என்னும் இடத்தில ,எரிசக்தி மாற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் குறித்த ஜி 20 அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது .மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (ஐசி) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ஆர். கே. சிங், வீடு மின்மயமாக்கல் மற்றும்  இந்தியாவில் அனைவருக்கும் எரிசக்தி வழங்க இருப்பதாக கூறியுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் தங்களது  உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான தங்கள் இலக்கை அடைவதற்கான முற்போக்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்

இஸ்ரேலுடன் இணைந்து பஞ்சாப் நீர் மேலாண்மை திட்டம்
 • பஞ்சாப் அமைச்சர் சுக்பிந்தர் சிங் சர்க்காரி மாநிலத்திற்கு ஒரு விரிவான நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்காக இஸ்ரேல் நிபுணர்கள் குழுவை சண்டிகரில் சந்தித்தார். முன்னதாக, இஸ்ரேலிய குழு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தற்போதைய நிலைமை மற்றும் மாநிலத்தில் நீர் துறையில் உள்ள சவால்களை மதிப்பீடு செய்தது. அக்டோபர் 2018ல் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பின்னர் இஸ்ரேலின் தேசிய நீர் நிறுவனமான மெகொரோட் மற்றும் பஞ்சாப் அரசு 2019 ஏப்ரல் மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

ஐ.எஸ்.ஐ -ன்  புதிய தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத்:
 • பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) – ன் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐ.எஸ்.ஐ யின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், எட்டு மாதங்கள் மட்டுமே பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத், அசிம் முனீரைத் தொடர்ந்து அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“சூசானா கபுட்டோவா” ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்:
 • ஸ்லோவாக்கியாவில், ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் செய்த “சூசானா கபுட்டோவா” நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பாதுகாப்பு செய்திகள்

“ஆபரேஷன் சன்ரைஸ் 2”
 • இந்தியா மற்றும் மியான்மர் இராணுவப்படைகள் மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாமில் செயல்படும் பல போராளி குழுக்களை குறிவைத்து மே 16 முதல் அந்தந்த எல்லைப் பகுதிகளில் மூன்று வார கால ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டன. “ஆபரேஷன் சன்ரைஸ்” இன் முதல் கட்டம் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தோ-மியான்மர் எல்லையில் நடத்தப்பட்டது, இந்த நடவடிக்கையின் போது வடகிழக்கு போராளிகள் குழுக்களின் பல முகாம்கள் சிதைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

கேரளப் பள்ளிக்கு UNEP அங்கீகாரம்
 • மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் உணர்வை ஊக்குவிக்கும் செயல்களுக்காக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) அங்கீகாரத்தை கோட்டக்கலுக்கு அருகிலுள்ள குட்டிப்பாலாவில் உள்ள கார்டன் வேலி ஈ.எம். மேல்நிலைப்பள்ளி வென்றுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரூர் ஆற்றின் கரையில் 2,000 மூங்கில் மரங்களை இந்த பள்ளி நடவு செய்தது குறிப்பிடத்தக்கது.

செயலி & இணையதள போர்ட்டல்

அசாம் மாநில போக்குவரத்துக் கழகத்தின் சலோ பயன்பாடு
 • அசாம் போக்குவரத்து அமைச்சர் சந்திர மோகன் படோவரி, குவாஹாத்தி மாநில போக்குவரத்துக் கழகத்தின் சலோ பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார். பயணிகளின் பஸ் நேரலை நேரத்தைப் பற்றி அறிந்து கொள்ள இந்தப் பயன்பாடு உதவும், இதனால் அவர்கள் பயணத்தைத் திட்டமிடலாம். மக்கள் தங்கள் பஸ்ஸின் நேரடி ஜி.பி.எஸ் ( GPS ) நிலையை ஒரு வரைபடத்தில் கண்காணிக்க முடியும். இது அவசரகால SOS போன்ற அம்சங்களுடன் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும்.

விளையாட்டு செய்திகள்

வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்
 • நெதர்லாந்தில் டென் போஷில் நடந்த வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் ரீகர்வ் பிரிவின் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆண்கள் சாம்பியன்ஷிப் அணி 14 வருட இடைவெளிக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 16 & 17, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here