நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 30 2019

0
Daily Current Affairs – July 30 2019

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 30 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

முக்கியமான நாட்கள்

ஜூலை 30 – சர்வதேச நட்பு தினம்
 • சர்வதேச நட்பு தினம் என்பது யுனெஸ்கோவின் முன்மொழிவைத் தொடர்ந்து 1997ல் ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். உலகெங்கிலும் உள்ள மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு உன்னதமான மற்றும் மதிப்புமிக்க உணர்வாக நட்பின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பதன் அடிப்படையில் சர்வதேச நட்பு தினம் அமைந்துள்ளது.

தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் சரணாலயம் மற்றும்  கேரளாவின் பெரியார் சரணாலயம் சிறந்த புலி இருப்புகளாக மதிப்பிடப்பட்டுள்ளது
 • 4வது தேசிய புலி மதிப்பீடு (புலி கணக்கெடுப்பு) உடன் வெளியிடப்பட்ட இந்தியாவின் 50 புலி சரணாலயங்களின் மதிப்பீட்டின்படி, மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் சரணாலயம் மற்றும் கேரளாவின் பெரியார் சரணாலயம் ஆகியவை நாட்டின் சிறந்து நிர்வகிக்கப்படும் புலி இருப்புகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133வது பிறந்த தினத்தை கூகுள் டூடுல் கௌரவித்தது
 • அறுவை சிகிச்சை நிபுணர், கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் 133வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருடைய ஓவியத்தை டூடுலில் போட்டு கௌரவித்தது. அவர் 1912 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராகவும், மெட்ராஸ் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றியவர் ஆவார்.

ஜம்முகாஷ்மிரின் உத்தம்பூர் மாவட்ட நிர்வாகம் “ஜீனே தோ” என்ற ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்துகிறது

 • ஜம்மு-காஷ்மீரில், உத்தம்பூர் மாவட்ட நிர்வாகம் “ஜீனே தோ” என்ற ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. பாலின விகிதத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு நிதியளிக்கப்பட்ட பேடி பச்சாவ் பேடி பதாவோ திட்டத்தின் கீழ் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் தடுப்புச் சட்டம் (பிசிபிஎன்டிடி) சட்டத்தை மீறுபவர்களை கையாள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சர்வதேச செய்திகள்

இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் நிலைமையை ஆய்வு செய்கின்றன
 • அமைதியையும் ஸ்திரத்தன்மையும் பேணுவதற்காக எல்லைப் பகுதிகளின் நிலைமையை இந்தியாவும் சீனாவும் ஆய்வு செய்துள்ளன. இரு தரப்பினர் இடையே பெய்ஜிங்கில் இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான WMCC இன் 14 வது கூட்டத்தை நடத்தினர்.
ஹைட்டியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினர் முன்மாதிரியான சேவைக்காக விருதுகளை வென்றனர்
 • கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஹைட்டிய காவல்துறையை ஆதரித்த இந்திய அமைதி காக்கும் படையினர், வரும் அக்டோபரில் ஐ.நா. மிஷன் நிறைவடைவதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு திரும்புகின்றனர். அவர்களின் பங்களிப்புக்காக பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றனர். இந்தியாவின் 184 ஆண்டுகள் பழமையான துணை ராணுவப் படையான அசாம் ரைபிள்ஸை சேர்ந்த 140 வீரர்கள் இதில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் செய்திகள்

சந்திரயன் -2 3- ம் படி நிலைக்கு உயர்த்தப்பட்டது
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக மூன்றாம் படி நிலைக்கு உயர்த்தப்பட்டது. சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் மத்தியில் சந்திரனின் சுற்றுப்பாதையை எட்டும் என்றும், மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் ஹயாபுசா -2 சிறுகோள் ரியுகுவில் இரண்டாவது கட்ட ஆராய்ச்சிக்காக வெற்றிகரமாக தரையிறங்கியதுது
 • ஜப்பானின் ஹயாபூசா 2 இறுதிக்கட்ட ஆராய்ச்சிக்காக தொலைதூர சிறுகோள் ரியுகு மீது வெற்றிகரமாக தரையிறங்கியது, அங்கு ரியுகுவின் மாதிரிகளை சேகரிக்க உள்ளது. இதன்மூலம் சூரிய மண்டலத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியும் என்று நம்பப்படுகிறது.

வணிகம் & பொருளாதாரம்

மொபிக்விக் மற்றும் ஹிப் பார் மீது ரிசர்வ் வங்கி ரூ .26 லட்சம் அபராதம் விதித்தது
 • ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரிசர்வ் வங்கி இரண்டு ஆன்லைன் கட்டண அமைப்புகளான மொபிக்விக் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஹிப் பார் பிரைவேட் லிமிடெட் வழங்குநர்களுக்கு சுமார் 26 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா-மொசாம்பிக் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • வெள்ளையர் கப்பல் தகவல்களைப் பகிர்வது மற்றும் நீரளவியல் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய அரசு மற்றும் மொசாம்பிக் அரசு இடையில் கையெழுத்திடப்பட்டன. இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலம் தற்போதைய இந்தோ-மொசாம்பிகன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படும் என நம்பப்படுகிறது.
இந்தியா-மியான்மர் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • இந்தியாவும் மியான்மரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டு பயிற்சிகள் மற்றும் மியான்மர் பாதுகாப்பு சேவைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தல்போன்றவை கையெழுத்திடப்பட்டதாக தெரிகிறது. மேலும் கூட்டு கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு, மருத்துவ ஒத்துழைப்பு, மாசுபாடுக்கான தீர்வு மற்றும் புதிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றால் கடல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறியப்படுகிறது.
இந்தியா-பெனின் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • இந்தியா மற்றும் பெனின் கல்வி, சுகாதாரம் மற்றும் இ-விசா வசதிகள் குறித்து நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. தொலைதூர கல்வித் திட்டமான இ-வித்யபாரதி மற்றும் தொலைதூர மருத்துவ முயற்சியான இ-ஆரோக்கியபாரதி ஆகிய மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செய்திகள்

IN LCU L-56 இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது
 • வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் என்பவரால் IN LCU L-56, லேண்டிங் கிராஃப்ட் யூடிலிட்டி (எல்.சி.யு) எம்.கே. IV வகுப்பின் ஆறாவது கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. எல்.சி.யு 56 என்பது நிலம் நீர் இரண்டிலும் செல்லும் கப்பலாகும், இதன் முக்கிய பங்கு பிரதான போர் பீரங்கிகள், கவச வாகனங்கள், துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை கப்பலில் இருந்து கரைக்கு கொண்டு செல்வதும் பயன்படுத்துவதும் ஆகும்.

விளையாட்டு செய்திகள்

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது
 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை  2013ம் ஆண்டு நடத்த  வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு திட்டம்மிட்டது. ஆனால் அந்தத்தொடர் 2017 க்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இறுதியாக, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் 1 முதல் 2021 ஏப்ரல் 30 வரை நடைபெறும் என்று  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அஞ்சும் மௌத்கில் உலக சாதனை படைத்துள்ளார்
 • உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான அஞ்சும் மௌத்கில் முதல் ஆளாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். பெண்கள் ஏர் ரைபிள் பிரிவில் மெஹுலி கோஷை 1.7 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாதனையை விட சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here