நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 19, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 19, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

தேசிய செய்திகள்

10 வது ஜாக்ரான் திரைப்பட விழா
 • ஜூலை 18 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள சிரி கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 வது ஜாக்ரான் திரைப்பட விழா நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். மேலும் மக்களின் வாழ்க்கையில் சினிமாவின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் அவர் எடுத்துரைத்து இது மக்களை இணைக்கும் ஒரு ஊடகம் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் சினிமாவின் வரலாற்று வளர்ச்சியையும், இந்தியாவின் மென்மையான சக்தியின் டிரான்ஸ்போர்ட்டராக இந்திய சினிமாவின் வளர்ந்து வரும் தாக்கத்தை குறித்தும் கூறினார்.

தெலுங்கானா

WEF மையம், தெலுங்கானா அரசு ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது
 • தெலுங்கானா அரசாங்கமும் நான்காவது தொழில்துறை புரட்சி வலையமைப்பிற்கான உலக பொருளாதார மன்றத்தின் மையமும் ட்ரோன்கள் மூலம் ரத்தம் மற்றும் தடுப்பூசிகள் போன்ற அவசர மருத்துவ பொருட்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளன. இது சுகாதார வழங்கல் முறையில் முடிவெடுப்பதை எளிதாக்க உதவும், கடைசி தூர விநியோகங்களில் கவனம் செலுத்துதல் மற்றும் மருத்துவ விநியோக முறையை பாதிக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

டிஜிட்டல் நிறுவனங்களுக்கான  வரி விதிக்கும் திட்டத்திற்கு ஜி 7 நிதி அமைச்சர்கள் ஒப்புதல்
 • பிரான்சில் ஜி 7 நிதி மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில்  பேஸ்புக் மற்றும் கூகுள்  போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை ஒப்புக் கொண்டது, இது அவர்களுக்கு குறைந்தபட்ச வரிவிதிப்பை நிர்ணயிக்கும். ஜி 7 மாநாட்டின் தலைவர் பதவியை தற்போது வகிக்கும் பிரான்ஸ், உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளின் குழுவான ஜி7ற்கு   ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், புதிய வணிக மாதிரிகளை நிவர்த்தி செய்ய புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

அறிவியல்

முதன் முதலில் நிலவில்  தரையிறங்கி 50 ஆண்டுகள் நிறைவு
 • ஜூலை 20, 1969 இல், அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் “பஸ்” ஆல்ட்ரின் ஆகியோர் அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் பயனித்து  சந்திரனில் முதன் முதலில் தரை இறங்கினர். அமெரிக்க  ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி (1917-1963) 1960 களின் முடிவில் ஒரு மனிதனை நிலவில் தரையிறக்கும் தேசிய இலக்கை அறிவித்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் தரை இறங்கியது. அப்பல்லோ 17, இறுதி மனிதர்கள் கொண்ட சந்திரன் பயணம் 1972 இல் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

மாநாடுகள்

இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக குழுவின் 13 வது கூட்டம் நடைபெற்றது.
 • நம் நாட்டின் மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை செயலர் டாக்டர் லியாம் ஃபாக்ஸ்ஸை, ஜூலை 15, 2019 அன்று இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் (ஜெட்கோ) 13 வது கூட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பு லண்டனில் நடைபெற்றது .

புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்

‘காசநோய் இல்லா இந்தியா’ முன்முயற்சிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
 • ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இடையே “காசநோய் இல்லா இந்தியா” முன்முயற்சிக்கான கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்க மட்டத்தில் இடைத்துறை ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு ஆயுஷின் உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன நெட்வொர்க் இணைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் காசநோய் பராமரிப்பு சேவைகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு  செய்திகள்

டிஆர்டிஓ ஆராய்ச்சி கப்பல் ஐஎன்எஸ் சாகர்த்வானி
 • சாகர் மைத்ரி என்பது டிஆர்டிஓவின் ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும், இது சமூக-பொருளாதார அம்சங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்)” என்ற கொள்கை அறிவிப்பின் பரந்த நோக்கத்துடன் ஒத்து போவதாகவுள்ளது. குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ரிம் (ஐஓஆர்) நாடுகளிடையே கடல் ஆராய்ச்சியில் அறிவியல் தொடர்புபை மேம்படுத்தும் நோக்கும் கொண்டுள்ளது. பிரதமரின் கொள்கையின் கீழ், டிஆர்டிஓவின் குறிப்பிட்ட அறிவியல் கூறு “மைத்ரி [MAITRI] (கடல் மற்றும் கூட்டாண்மை இடைநிலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி முயற்சி)” ஆகும்.
 • டி.ஆர்.டி.ஓவின் முதன்மை அமைப்புகளில் உள்ள ஆய்வகமான கொச்சியின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகம் (NPOL) ஐ.என்.எஸ் சாகர்த்வானியை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.இது இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் ஆராய்ச்சி சோதனைகளை நடத்துகிறது மற்றும் NPOL இன் கடலில் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது

திட்டங்கள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ யுஜிசி இன்‘பரமார்ஷ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
 • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க்” புதிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (என்ஏஏசி) அங்கீகார ஆர்வமுள்ள நிறுவனங்களை வழிநடத்துவதற்கான பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) ‘பரமார்ஷ்’ திட்டத்தை தில்லியில்  தொடங்கினார். இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய சவாலை எதிர்கொள்வதில் இந்த திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தீட்சாரம்பை- மாணவர் ஊக்குவித்தல் திட்டத்திற்கான வழிகாட்டியை வெளியிட்டார்
 • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ மாணவர் ஊக்குவித்தல் திட்டத்திற்கான யுஜிசி வழிகாட்டியை – தீட்சாரம்பை புதுதில்லியில் வெளியிட்டார் .மாணவர் ஊக்குவித்தல் திட்டத்திற்கான வழிகாட்டியானது புதிய மாணவர்கள் புதிய சூழலில் தங்களை சரிசெய்யவும் வசதியாகவும் இருக்க உதவும், நிறுவனத்தின் நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்தை பற்றி அறிய , மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிணைப்புகளை உருவாக்க அவர்களுக்கு உதவும், மேலும் பெரிய நோக்கம் மற்றும் சுய ஆய்வை அவர்கள் வெளிப்படுத்த உதவும்.

விளையாட்டு செய்திகள்

ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை 2019
 • ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பையில், ஷூட்டிங்கில் சரப்ஜோத் சிங் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் தங்கம் வென்றார். ஜெர்மனியின் சுஹ்லில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஒன்பதாவது தங்கம் இதுவாகும். இந்தியா ஒன்பது தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என  மொத்தம் 22 பதக்கங்களுடன்  பதக்க பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது.

 PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 19, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here