நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 05, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 05, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

தேசிய செய்திகள்

ஆர்ஆர்பி ஆட்சேர்ப்பு தேர்வுகள் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளன
  • பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஆர்ஆர்பிக்களின் ஆட்சேர்ப்பு தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமின்றி கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.பி களில் ஸ்கேல் -1 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச மாநிலம் கட்டணமில்லா முதலமைச்சர் ஹெல்ப்லைன் 1076  ஐ அறிமுகப்படுத்தியது
  • உத்தரபிரதேசத்தில், மாநில அரசு கட்டணமில்லா முதலமைச்சர் ஹெல்ப்லைன் 1076 ஐ அறிமுகப்படுத்தியது, இது மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் தங்கள் புகார்களைப் பதிவுசெய்ய உதவும், மேலும் புகார்கள் குறித்து  அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்.
திரிபுரா
திரிபுராவுக்கு சாலை திட்டதிற்காக 358 கோடி ரூபாயை வழங்கியது மத்திய அரசு 
  • மத்திய அரசு திரிபுரா மாநிலத்திலுள்ள  கிராமப்புறங்களில் புதிய சாலைகள் அமைக்க கூடுதல் தொகையாக ரூபாய் 358 கோடியை மத்திய அரசு வழங்கியது. மேலும் இது மாநிலத்தில் முடிக்கப்படாத திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை முடிக்க மாநில அரசுக்கு உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

பங்களாதேஷ் மற்றும் சீனா இடையே பல்வேறு துறைகளின் கீழ் ஒன்பது ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன
  • பங்களாதேஷுக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன இதில் மியான்மரில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயற்த்தப்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு சீனா 2,500 மெட்ரிக் டன் அரிசியை பங்களாதேஷுக்கு வழங்கப்பட்டதும்  ஒரு பகுதியாகும். ஒன்பது ஒப்பந்தங்களில்  – ஐந்து ஒப்பந்தங்கள், மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒரு ஆவணம் ஆகும் . பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா மற்றும் சீன நாட்டு பிரதம மந்திரி லி கெக்கியாங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த  ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன
பிரஞ்சு அரசு  இணைய நிறுவனங்களுக்கு 3% வரி விதிக்கவுள்ளது 
  • கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வரி விதிப்பதற்கு பிரான்சின் கீழ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. குறைந்த வரியை உடைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தலைமையகத்தை அமைப்பதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் வரிகளைத் தவிர்ப்பதைத் தடுப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, ​​நிறுவனங்கள் பிரான்ஸ் போன்ற பெரிய விற்பனையைக் கொண்ட நாடுகளில் கிட்டத்தட்ட வரி செலுத்தவில்லை.

வணிக செய்திகள்

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% வளர்ச்சி அடையும் என பொருளாதார ஆய்வு அறிக்கை தகவல்
  • 2018-19ற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2019-20ம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுகையில், இந்திய பொருளாதாரம் 2018-19ல் 6.8 க்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்பிடித் துறையில் 2.9 சதவீத வளர்ச்சி அடையும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வழங்கினார்
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20 பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வழங்கினார். இது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும். ஒரு அரசாங்கத்தின் ஆண்டு நிதி அறிக்கை, யூனியன் பட்ஜெட் கடந்த நிதி ஆண்டின் வருவாய் மற்றும் செலவுகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் மற்றும் கணிப்புகள் பற்றிய விவரங்களை அளிக்கிறது.
  • இந்திய அரசியலமைப்பில் ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான சரத்து 112 ஆகும். பட்ஜெட் என்ற சொல் நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

விளையாட்டு செய்திகள்

இளவேனில்  பெண்களின் 10 மீ ஏர் ரைஃபிளில் வெள்ளி பதக்கம் வென்றார்
  • இத்தாலியில் நடைபெற்ற 30 வது நாப்போலி 2019 கோடைக்கால யுனிவர்சியேட் நிகழ்வில் இளவேனில் வாலரிவன் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்றார்.
பிராங்க் லம்பார்ட் செல்சியா கால்பந்து அணியின் தலைமை  பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • பிராங்க் லம்பார்ட் செல்சியா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், மவுரிசியோ சர்ரிக்கு பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரரான பிராங்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 05, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!