நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18 & 19, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 18 & 19, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019      

முக்கியமான நாட்கள்

ஆகஸ்ட் 19 – உலக புகைப்பட நாள்

 • உலக புகைப்பட நாள் என்பது புகைப்படம் எடுத்தல் கலை, கைவினை, அறிவியல் மற்றும் வரலாற்றின் உலகளாவிய கொண்டாட்டமாகும். இந்த நாள் புகைப்படக்காரர்களை அவர்களின் உலகத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள மேலும் அவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

ஆகஸ்ட் 19 – உலக மனிதாபிமான நாள்

 • மனிதாபிமான சேவையில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக மனிதாபிமான நாள் (WHD) அனுசரிக்கப்படுகிறது.
 • 2019 WHD பிரச்சாரம்: #WomenHumanitarians

தேசிய செய்திகள்

குஜராத்

குஜராத்தில் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படவுள்ளது

 • குஜராத்தில் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிஐசிஇடி) அமைக்கப்படும் என்று மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார்.
அசாம்
அசாமின் முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையம்
 • அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், திப்ருகரில் மாநிலத்தின் முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையத்தை திறந்து வைத்தார். மாநிலத்தை காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிப்பதற்கும், சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் சி.என்.ஜி எரிபொருள் நிலையம் அமைப்பதற்கான ஒரு வரைபடத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது தெரிவித்தார்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் பங்கர்  அருங்காட்சியகம்
 • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் “பங்கர்” அருங்காட்சியகத்தை மும்பையில் உள்ள ராஜ்பவனில் திறந்து வைத்தார். பங்கர் அருங்காட்சியகம் சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட அருங்காட்சியமாகும். இந்த ஆண்டு  இறுதியில் ஆன்லைன் முன்பதிவு மூலம் இந்த அருங்காட்சியகம் பொது மக்களுக்காக திறக்கப்பட உள்ளது.

சர்வதேச செய்திகள்

2014 ஆம் ஆண்டில் இறந்த  ஐஸ்லாந்தின் ஓக்ஜோகுல் பனிப்பாறை நினைவுகூரப்பட்டது
 • ஐஸ்லாந்தில், பனிப்பாறை ஓக்ஜோகுல்லின் இழப்பை நினைவுகூரும் வகையில் மக்கள் அனைவரும் ஓன்றாக கூடவுள்ளார்கள் , இந்த பனிப்பாறை  2014 ஆம் ஆண்டில் தனது 700 வது  வயதில் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பனிப்பாறை இறந்ததாக ஐஸ்லாந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அறிவியல்

அருணாச்சல பிரதேசத்தில் ஐந்து புதிய மீன் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
 • அருணாச்சல பிரதேசத்தில், ராஜீவ் காந்தி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐந்து புதிய மீன் இனங்களை கண்டுபிடித்துள்ளனர். “மிஸ்டஸ் பிரபினி, எக்ஸோஸ்டோமா கோட்டெலாட்டி, க்ரீட்டூசிலோக்லானிஸ் தவாங்கென்சிஸ், கர்ரா ரங்கனென்சிஸ் மற்றும் பைசோசிஸ்டுரா ஹர்கிஷோரி” இவைகள்  புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து மீன் இனங்களின் அறிவியல் பெயர்கள் ஆகும்.

மாநாடுகள்

என்.சி.டி.இ. யின் ஆசிரியர் கல்வி குறித்த சர்வதேச மாநாடு

 • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ புதுடில்லியில் “ஆசிரியர் கல்வியின் பயணம்: உள்ளூரிலிருந்து உலகத்தை நோக்கி என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அதன்  வெள்ளி விழாவை  கொண்டாடுவதற்காக  இரண்டு நாள் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியா-நேபாள கூட்டு ஆணையத்தின் 5 வது கூட்டம்
 • இந்தியா-நேபாள கூட்டு ஆணையத்தின் 5 வது கூட்டம் ஆகஸ்ட் 21- 22 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற உள்ளது. இந்தியா-நேபாள கூட்டு ஆணையம் ஜூன் 1987 இல் நிறுவப்பட்டது.அதன் கூட்டங்கள் நேபாளத்திலும் இந்தியாவிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகின்றன. ஆணையத்தின் கடைசி கூட்டம் அக்டோபர் 2016 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.

நியமனங்கள்

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டொமிங்கோ நியமிக்கப்பட்டுள்ளார்
 • தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோவை பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இதை டாக்காவில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் அறிவித்தார்.

திட்டங்கள்

பிரதான் மந்திரி லகு வியாபரி மான்-தன் திட்டம்
 • பிரதான் மந்திரி லாகு வியாபாரி மான்-தன் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டில் 25 லட்சம் சந்தாதாரர்களையும் 2023-2024 க்குள் 2 கோடி சந்தாதாரர்களையும் பதிவுசெய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தொடங்கப்படும் ஆன்லைன் போர்ட்டலைத் தவிர, பிற திட்டங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பொதுவான சேவை மையங்கள் மூலம் மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • வர்த்தகர்கள் 18 முதல் 40 வயதுக்குளும் மேலும் அவர்களது  ஆண்டு வருவாய் ரூ 1.5 கோடிக்கும் குறைவாக  இருக்க வேண்டும். சந்தாதாரர்கள் அவர்களது ஒரு மாதத் தொகையை பங்களிப்பாக அளிக்க வேண்டும், இது அவர்கள் திட்டத்தில் நுழையும் வயதைப் பொறுத்து மாறுபடும், அது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும். 60 வயதை எட்டியவுடன், சந்தாதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக  ரூ 3,000 கிடைக்கும்.

விளையாட்டு செய்திகள்

12 வயதுக்குட்பட்ட ஆசிய டென்னிஸ்  சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வென்றது
 • கஜகஸ்தானில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட ஆசிய டென்னிஸ் அணி சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீன தைபியை தோற்கடித்து பட்டத்தை வென்றது.
உலக திறன்கள் சர்வதேச போட்டி
 • ரஷ்யாவின் கசானில் நடைபெறும் உலக திறன் சர்வதேச போட்டியில் இந்தியா  சார்பில் 48 போட்டியாளர்கள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளது. இந்த மாதம் 22 முதல் 27 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மொபைல் ரோபாட்டிக்ஸ், முன்மாதிரி மாடலிங், சிகையலங்கார நிபுணர், பேக்கிங், வெல்டிங் மற்றும் கார் பெயிண்டிங் உள்ளிட்ட 44 திறன்களில் இந்த குழு பங்கேற்கிறது.
தடகள மிடின்க் ரைட்டர் நிகழ்வில் ஹிமா தாஸ், முகமது அனஸ் தங்கம் வென்றனர்
 • இந்தியாவின் சிறந்த ஸ்ப்ரிண்டர்களான ஹிமா தாஸ் மற்றும் முகமது அனஸ் செக் குடியரசில் நடந்த தடகள மிடின்க் ரைட்டர் போட்டியில் 300 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கபதக்கத்தை  வென்றனர். பெண்கள் பிரிவில்  ஹிமா தாசும் ஆண்கள் பிரிவில் முகமது அனஸும் தலா ஒரு பதக்கத்தை  வென்றனர். கடந்த மாதம் முதல் நடந்த ஐரோப்பிய பந்தயங்களில்  ஹிமாவின் ஆறாவது தங்கம்  இது வாகும்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!